நாம் தமிழர் கட்சியில் அடுத்தடுத்து கம்பி நீட்டும் நிர்வாகிகள்: காரணம் என்ன?

நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் விலகியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் நிர்வாகிகள் இப்படி அடுத்தடுத்து கம்பி நீட்டுவதற்கு காரணம் என்ன என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் விலகியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் நிர்வாகிகள் இப்படி அடுத்தடுத்து கம்பி நீட்டுவதற்கு காரணம் என்ன என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

author-image
WebDesk
New Update
seeman raja

நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் விலகியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சில மாதங்களுக்கு முன், நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி வெற்றிக்குமரன் நீக்கப்பட்டார், அவரைத் தொடர்ந்து மற்றொரு முக்கிய நிர்வாகி புகழேந்தி விலகிய நிலையில், தற்போது மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் விலகியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் நிர்வாகிகள் இப்படி அடுத்தடுத்து கம்பி நீட்டுவதற்கு காரணம் என்ன என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

Advertisment

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்க தீவிரமாகத் தயாராகி வருகின்றன. நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலிலும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவது என்று முடிவெடுத்து வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜா அம்மையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அன்புடன் எனது அனைத்து நாம் தமிழர் உறவுகளே.. அனவருக்கும் வணக்கம்.

கடந்த எட்டு ஆண்டுகளாக உங்களுடன் பயணித்த நான் இன்றுடன் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறுகிறேன். நாம் தமிழர் கட்சியில் இரண்டு முறை சட்டமன்ற வேட்பாளர், ஒருமுறை சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் ஆக என்னை நிறுத்தி எனக்காகவும், தமிழ் தேசியத்திற்காகவும் உழைத்த எனது தம்பிகள், தங்கைகளை விட்டு கனத்த இதயத்தோடு பிரிகிறேன். உங்களுடன் நான் பயணித்த காலங்கள் எனது வாழ்வின் முக்கியமான காலமாகவும், இனிமையான வசந்த காலமாகவும் என்னி மகிழ்ச்சி கொள்கிறேன். நான் உங்களை விட்டு பிரிவது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். வருத்தமடைய செய்யலாம். ஆனால், கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களும், சாதி பிரிவினைகளும், சமூக படுகொலைகளையும் கண்டு என்னால் இதில் பயணிக்க விருப்பமில்லை. பொதுக்குழு என்ற பெயரில் வெற்று பக்கங்களில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தொகுதி செயலாளர்களிடம் கையெழுத்து வாங்குவது, நான் பயணிக்கும் கட்சியில் யார் செயலாளர், யார் பொருளாளர் என்பதை அறியாமலும், வெளிப்படுத்தாமலும் பயணிக்க விருப்பமில்லை. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான எனக்கே தெரியாமல் கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறப்படும் கருப்பையா என்பவர் யார்? கட்சிக்கு என்ன செய்துள்ளார்? நீங்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியுமா? வேட்பாளர்கள் சிலரை தவிர பலபேரை எப்போதாவது களத்தில் பார்த்திருக்கிறீர்களா? கட்சிக்குள் சாதி இல்லாமல் செயல்பட முடியாதா? கட்சியில் அண்ணன் விருப்பப்படி செயல்பாடுகள் உள்ளதா? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் சில நாட்களாக தவித்து வந்தேன். பாரதிமோகன், திருமால் செல்வன் போன்றோர் கட்சியின் பொருளாளராகவும், துணைச் செயலாளராகவும் நியமித்து இருப்பதாக கூறப்படுவது எல்லாம் உங்களுக்கு தெரியுமா? கட்சியில் அண்ணன் விருப்பப்படி செயல்பாடு உள்ளதா? அண்ணன் அருகில் உள்ள மூன்று பேரை தவிர்த்து நீங்கள் அண்ணனை சகஜமாக பார்க்க முடிகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள். என்னதான் எனக்கு வருத்தம் இருந்தாலும், என்னை சீமான் அவர்கள் 8 ஆண்டுகளாக கண்ணியமாக நடத்தி, எனக்குரிய மரியாதையை எனக்கு கொடுத்து சிறப்பித்தமைக்கு என்றைக்கும் நன்றியுணர்வோடு இருப்பேன். தமிழ் தேசியம் ஒருநாள் வெற்றிபெறும்போது மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன். வாழ்க தமிழ் தேசியம். வாழ்க நாம் தமிழர் கட்சி என்று வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

சில மாதங்களுக்கு முன்பு, நாம் தமிழர் கட்சியில் மதுரை மண்டலத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்த வெற்றிக்குமரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட வெற்றிக்குமரன், “நாம் தமிழர் கட்சியின் விதிமுறைகளின் படி, மாநில பொறுப்பில் இருக்கும் என்னை நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவை கூட்டித்தான் என்னை நீக்க முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

வெற்றிக் குமரனைத் தொடர்ந்து, கடந்த மாதம், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த புகழேந்தி மாறன் கட்சியில் இருந்து விலகினார். விலகலின்போது ஃபேஸ்ஃபுக் பக்கத்தில் பதிவிட்ட அவர், “அண்ணன் சீமான் அவர்களின் வார்த்தை மட்டும் தான் அரசியல் என நம்பி தொலைத்த நாட்கள் தான் அதிகம். அனுபவங்கள்தான் வாழ்க்கை பாடமாகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

வெற்றிக்குமரன், புகழேந்தி மாறனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இப்படி நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கம்பி நீட்டுவதற்கு காரணம் என்ன என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ntk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: