/indian-express-tamil/media/media_files/8W6MhvV3BsRqdj0is98a.jpg)
மேட்டுப்பாளையம் அருகே திடீரென தீ பற்றி எரிந்த பேருந்து; சுற்றுலா வந்த 50 கல்லூரி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா வருவதற்காக 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடன் சுற்றுலா பேருந்து ஒன்று வந்துள்ளது.
அப்படி வந்த அந்த பேருந்து அதிகாலை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் தூரிப்பாலம் பகுதியில் வந்த போது பேருந்தின் பின் பக்க சக்கரத்தில் திடீரென தீ பற்றிய உள்ளது.
பின்னர் சுற்றுலா பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் அவசர அவசரமாக இறக்கி விடபட்ட நிலையில் பேருந்து உள் பகுதியிலும் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது.
திடீரென தீ பற்றி எரிந்த சுற்றுலா பேருந்து; உயிர் தப்பிய 50 கல்லூரி மாணவர்கள்#Kovaipic.twitter.com/ySRifvfGYn
— Indian Express Tamil (@IeTamil) October 8, 2023
அப்படி பேருந்து முழுவதும் தீ பற்றிய நிலையில் உடனடியாக அது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் பேருந்தின் பெரும்பாலான பகுதிகளில் தீயில் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நல் வாய்ப்பாக யாருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.