Advertisment

சூரிய மூர்த்தி பேசிய வீடியோ போலி அல்ல; நாமக்கல் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு சிக்கல்

சூரியமூர்த்தி சொல்வது போல அவர் பேசிய வீடியோ போலி என்று தீர்ப்பில் சொல்லப்படவில்லை. அந்த வீடியோ தவிர மேலும் ஒரு வீடியோவிலும் அவர் ஆணவக் கொலைகளுக்கு ஆதரவாக வெட்டுவேன் குத்துவேன் என்று பேசி இருப்பதை அறப்போர் பகிர்ந்துள்ளது.  

author-image
WebDesk
New Update
Namakkal DMK candidates previous casteist video goes viral

திமுக கூட்டணி வேட்பாளர் சூரியமூர்த்தி சாதிய ரீதியாக வெறுப்புணர்வுடன் பேசியிருப்பது குறித்தும் அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Dmk | Namakkal | தி.மு.க. கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர், சூரியமூர்த்தி கடந்த காலங்களில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதில் அவர் ஆணவக்கொலை குறித்தும், சாதிய ரீதியாக வெறுப்புணர்வுடன் பேசியிருப்பது குறித்தும் அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisment

இது குறித்து, அறப்போர் இயக்கம் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள அறிக்கையில், “அ.தி.மு.க ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கு தி.மு.க ஆட்சியில் முடித்து வைக்கப்பட்டு உள்ளது. 2.5 வருட இழுத்தடிப்புக்கு பிறகு நீதிமன்ற விசாரணை (Trial) 4 நாள்கள் தான் நடந்துள்ளது.

அதிலும் சாட்சியங்கள் பிறழ் சாட்சியாக மாறியதாலும், காவல்துறை குற்றத்தை நிரூபிக்க தவறியதாலும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சூரியமூர்த்தி சொல்வது போல அவர் பேசிய வீடியோ போலி என்று தீர்ப்பில் சொல்லப்படவில்லை. அந்த வீடியோ தவிர மேலும் ஒரு வீடியோவிலும் அவர் ஆணவக் கொலைகளுக்கு ஆதரவாக வெட்டுவேன் குத்துவேன் என்று பேசி இருப்பதை அறப்போர் பகிர்ந்துள்ளது.  

வீடியோவை பகிர்ந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக சூரியமூர்த்தி சொல்லி இருக்கிறார். வெளிப்படையாக சாதிய வெறுப்புணர்வை பகிர்ந்து விட்டு மற்றவர்களுக்கு சமூக நீதி வகுப்பெடுக்கும் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமல்ல எதிர்க்கட்சி தலைவர்கள் கூட அவருடைய இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் இருக்கிறார்கள். இதெல்லாம் தமிழகத்திற்கே அவமானம். 

திமுக அரசின் காவல்துறை இது வரை மேல்முறையீடு செய்யவில்லை என்றால் உடனடியாக இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

திமுகவின் கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சாதி வெறுப்புணர்வை தூண்டும்  ஆணவக்கொலை ஆதரவாளராக இருக்க கூடாது என்று திமுக தலைமை முடிவெடுக்க வேண்டும். இதை செய்தால் மட்டுமே நீங்கள் பேசும் சமூக நீதிக்கு கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும். 

உங்கள் தொகுதி வேட்பாளர்களை பற்றி எளிதாக வீடியோ மூலம் அறிந்து கொள்ள அறப்போர் Youtube Channelஐ https://youtube.com/@Arappor Subscribe செய்யுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dmk Namakkal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment