நாமக்கல் மாவட்டம் எருமபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் சத்துணவு தயாரிக்கும் சமையலறை அமைந்துள்ளது.
இங்கு கடந்த 2ம் தேதி, காலை பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் வந்தபோது, சமையலறை கதவின் பூட்டு மீது மனிதக் கழிவு வீசி எறியப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி, எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், எருமபட்டியைச் சேர்ந்த துரைமுருகன் என்பவரை கைது செய்தனர்.
சத்துணவு மைய சமையலர், உதவியாளருடன் முன்விரோதம் இருந்ததால், சத்துணவு மைய கதவில் மனிதக் கழிவை பூசியதாக போலீசாரிடம் துரைமுருகன் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக இந்த செயலுக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், முன்னாள் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“