சார்ஜ் போட்டபடி ஸ்மார்ட்போன் பேசியதால் நடந்த விபரீதம்

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
smartphone explodes in namakkal , android phone explodes

smartphone explodes in namakkal , android phone explodes

சார்ஜ் போட்டு செல்போனை பயன்படுத்தியதால் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நாமக்கலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஈரோட்டில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் டவர் மேனேஜராக பணி புரிந்து வருபவர் தேவேந்திரன்.  இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளியைச் சேர்ந்தவர்.

நேற்று, தேவேந்திரன் தனது ஆண்ட்ராய்டு செல்போனை வழக்கம் போல் சார்ஜ் போட்டுள்ளார். சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும்போதே தனது போனை இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது மின்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும்,   தேவேந்திரனின்  உடலை பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .

Advertisment
Advertisements

இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க -

  1. சார்ஜ் போடும்போது உங்கள் தொலைபேசியை தலையணையின் கீழ் வைக்க வேண்டாம்
  2. நீங்கள் போன் வாங்கும் பொது கொடுத்த ஒரிஜினல் சார்ஜரை முடுந்த வரையில் பயன்படுத்துங்கள்(ஏனெனில், ஒவ்வொரு சார்ஜரும் வித்தியாச வோல்டேஜில் இயக்கப்படுகிறது)
  3. ஸ்மார்ட்போனை அடிக்கடி கீழே விழுவதை தவிருங்கள்( அனோட் மற்றும் கேத்தோடு இடையே நிலைநிறுத்தப்பட்ட பேட்டரி பிரிப்பான் உடைவதால் மின்கசிவு ஏற்படும்)
  4. உங்கள் மொபைலை தண்ணீருக்கு அருகில் சார்ஜ் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: