நட்புடன் பழகி வந்த தோழிகள் இருவரில், ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட, பிரிவு தாங்காமல் இருவரும் தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நாமக்கல்லில் நடைபெற்றுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
நாமக்கல் மாவட்டம் எலாச்சிபாளையம் அடுத்த பெரியமணலி பகுதியை சேர்ந்தவர் ஜோதி ( வயது 23). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனது பாட்டி வீட்டில் 3 வயது மகளுடன் வசித்து வந்தார்.
Advertisment
Advertisements
பெரியமணலி பகுதியில் உள்ள பவர்லூமில் வேலைபார்த்து வந்த போது, அங்கு பிரியா ( வயது 20) உடன் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் இணைபிரியா தோழிகளாக இருந்தனர்.
இந்நிலையில், பிரியாவின் பெற்றோர்கள், பிரியாவுக்கு வரும் 27ம் தேதி திருமணம் நிச்சயித்திருந்தனர். திருமணம் என்பது சந்தோசமான நிகழ்வு என்றாலும், திருமணத்திற்கு பிறகு தங்களால் பார்த்துக்கொள்ள இயலவில்லை என்பதால், இவ்விருவரும் சோகத்தில் இருந்தனர்.
இதனினிடையே, கடந்த 16ம் தேதி ஜோதியின் வீட்டுக்கு பிரியா சென்றார். வெகுநேரமாகியும் பிரியா வீடு திரும்பாததால், அக்கம்பக்கத்தில் பிரியாவை தேடிய பிரியாவின் குடும்பத்தினர் எலாச்சிபாளையம் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிரியா கடைசியாக ஜோதியின் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பிரியாவின் குடும்பத்தினர், போலீசாரின் துணையுடன் ஜோதியின் வீட்டிற்கு சென்றனர். கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்ததால், தொடர்ந்து தட்டிப்பார்த்தனர். கதவு திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே பிரியா, ஜோதி இருவரும் சடலமாக கிடந்தனர். இருவரும் தற்கொலை செய்துகொண்டிருப்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
போலிசார், இருவரின் உடல்களையும் பிரேதபரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஜோதி, பிரியா இருவரும் தொடர்பில் இருந்ததாகவும், பிரிவு காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil