சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நமது புரட்சித் தொண்டன் நாளிதழ் வெளியீட்டு விழா பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமயில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், “நமது புரட்சித் தொண்டன்” என்ற நாளிதழை வெளியிட்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஓ. பன்னீர் செல்வம், “நமது இயக்கத்தில் துரோகிகளுக்கு இடம் கிடையாது. நமக்கு ஒரு பத்திரிகை வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்.
அந்த விருப்பம் தற்போது நிறைவேறி உள்ளது. இதற்காக தொண்டர்களிடம் சந்தா வாங்கப்பட்டு உள்ளது. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மருது அழகுராஜ் இந்த நாளிதழின் ஆசியராக செயல்படுவார்” என்றார்.
மேலும், “அடித்தட்டு தமிழக மக்கள் முன்னேற்றம் அடைவதை உறுதி செய்யும் வகையில் நாளிதழில் செய்திகள் வெளியாகும். இதுதான் இந்த நாளிதழின் இலக்கு.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வகுத்த சட்டம் மற்றும் தொண்டனுக்கு கொடுத்த உச்ச பட்ச மரியாதை, தொண்டனும் தலைமைக்கு போட்டியிடும் வாய்ப்பு அளிப்பது ஆகும்.
இதற்கு ஒரு சிறு மாசு ஏற்படுவதற்கு யாராவது முயற்சித்தால் அதை முளையிலே கிள்ளி எறியும் சக்தியாக இந்தப் புரட்சி தொண்டன் நாளிதழ் இருக்கும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கம் , பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“