பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மீனவர் அணி சார்பாக சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் பொதுமக்களுக்கு 370 கிலோ மீன் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நமீதா கலந்து கொண்டார்.
அதிமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டு, அக்கட்சியில் செயல்பட்டு வந்த நடிகை நமீதா, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக-வை விட்டு விலகி இருந்தார். இந்நிலையில் பாஜக-வின் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து கடந்த ஆண்டு இறுதியில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பா.ஜ.க-வின் நிகழ்ச்சியில் முதன் முறையாக கலந்துக் கொண்ட நமீதா, பொதுமக்களுக்கு 370 கிலோ மீன்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் மோடி. 10 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளார். 20 ஆயிரம் கோடி மீனவர்களுக்கு ஓதுக்கியுள்ளார்” என்றார்.
அப்போது சூர்யாவின் அறிக்கை குறித்த கேள்விக்கு, தான் பதில் கூற விரும்பவில்லை என்றார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”