தனியார் பங்களிப்புடன் தமிழக அரசு இனைந்து, அரசு பள்ளிகளை மேம்படுத்தும் 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தவாரம் சென்னையில் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, “எல்லா முன்னேற்றத்தையும் அரசே முழுமையாக செய்வது இயலாத ஒன்று. இதற்கு மக்களும் கைகோர்த்து முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும்.
அரசு பள்ளியில் படித்தவர்கள், அரசுக்கு தங்களது நன்றியை இந்த திட்டத்தின் மூலம் உதவி தெரிவிக்கலாம். அனைவருடைய உதவியும் ஆதரவும் நிச்சயம் தேவை.
நீங்கள் செலுத்தக்கூடிய ஒரு ரூபாய் நன்கொடையாக இருந்தாலும் கூட வெளிப்படைத்தன்மையுடனும், கடமையுணர்வுடனும், நம் அரசு பள்ளிகளுக்கும் அதில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அங்கு படிக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் செலவிடப்படும்" என்று உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து இந்த திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில் மட்டுமே ரூபாய் 50 கோடி நன்கொடையாக பெற்றுள்ளனர். அரசின் இந்த திட்டத்தை வரவேர்த்துடன் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தது பெரும் பாராட்டையும், தமிழக அரசின் மேல் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil