Advertisment

சென்னை நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் மே 31ம் தேதியுடன் இலவச பார்க்கிங் வசதி நிறுத்தம்

சென்னை நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் மே 31ம் தேதியுடன் இலவச பார்க்கிங் வசதி நிறுத்தம் செயல்படுகிறது.

author-image
WebDesk
New Update
metro parking

சென்னை நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் மே 31ம் தேதியுடன் இலவச பார்க்கிங் வசதி நிறுத்தம் செயல்படுகிறது.

Advertisment

இதைப்பற்றி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூன் 1, 2023 முதல் நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இலவச வாகன நிறுத்தம் வசதி இல்லை

சென்னை மெட்ரோ பயண அட்டை அல்லது டிஜிட்டல் கட்டண முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் வாகன நிறுத்தம் செய்து கொள்ளலாம்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளின் வாகன நிறுத்தும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சமீபத்தில் நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கரம் வாகன நிறுத்தும் இடத்தை திறந்துள்ளது. இந்த விரிவுபடுத்தப்பட்டு வாகன நிறுத்தும் இடத்தில 1000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.

நங்கநல்லூர் சாலை மெட்ரோ வாகன நிறுத்தும் இடத்தில 28.04.2023 முதல் 31.05.2023 வரை மெட்ரோ பயணிகளுக்காக இலவசமாக வாகன நிறுத்தம் வசதி இயக்கப்பட்டது.

இந்த நிலையில், மே மாதம் முடிவடைவதால், ஜூன் 1, 2023 முதல் சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை அல்லது டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் பார்க்கிங் கட்டணத்தை செலுத்தி, இனிமேல் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்", என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Metro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment