நாங்குநேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீர் இடமாற்றம் - திமுக புகார்
Nanguneri bypoll evm machines shift : நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டிருப்பதாக திமுக சார்பில், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Nanguneri bypoll evm machines shift : நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டிருப்பதாக திமுக சார்பில், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டிருப்பதாக திமுக சார்பில், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisment
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இதுதொடர்பான புகாரை தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் 13ம் தேதி அனுப்பியுள்ளார்.
அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாங்குனேரி இடைத்தேர்தலுக்காக நாங்குனேரி வட்டார அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 30 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சனிக்கிழமை நள்ளிரவில் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரிடமோ எந்தவித தகவலையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
Advertisment
Advertisements
இது தேர்தல் ஆணைய நடைமுறைகளுக்கும், அறிவுறுத்தல்களுக்கும் எதிரானது. இந்த திடீர் இடமாற்றம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. வெளிப்படைத் தன்மையுடன், நேர்மையான முறையில் இடைத்தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், இடமாற்றம் செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மீண்டும் பழைய இடத்துக்கே கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க வேண்டும் என புகார் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.