Advertisment

நாங்குநேரி சம்பவம்: கைதான மாணவரின் தந்தை பா.ஜ.க உறுப்பினர்; அண்ணாமலைக்கு தி.மு.க. மா.செ பதிலடி

நாங்குநேரி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தி.மு.க-வை சேர்ந்தவர்கள் தான் காரணம் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில், கைதான மாணவரின் தந்தை பா.ஜ.க உறுப்பினர் என அண்ணாமலைக்கு தி.மு.க மா.செ ஆவுடையப்பன் பதிலடி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nanguneri incident, Nanguneri incident Arrested student's father is BJP member, DMK functionary retaliate to Annamalai, நாங்குநேரி சம்பவம், கைதான மாணவரின் தந்தை பா.ஜ.க உறுப்பினர், அண்ணாமலைக்கு தி.மு.க. மா.செ பதிலடி, Nanguneri, BJP, DMK functionary retaliate to Annamalai

நாங்குநேரி சம்பவம், கைதான மாணவரின் தந்தை பா.ஜ.க உறுப்பினர், அண்ணாமலைக்கு தி.மு.க. மா.செ பதிலடி

நாங்குநேரி பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தி.மு.க-வை சேர்ந்தவர்கள் தான் காரணம் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில், கைதான மாணவரின் தந்தை பா.ஜ.க உறுப்பினர் என அண்ணாமலைக்கு தி.மு.க மா.செ ஆவுடையப்பன் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பட்டியல் இன மாணவர் மற்றும் அவரது சகோதரி, சக மாணவர்களால் வெட்டப்பட்ட விவகாரத்தில், கைதான மாணவரின் தந்தை பா.ஜ.க உறுப்பினர் என்று அண்ணாமலைக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஆவுடையப்பன் பதிலடி கொடுத்துள்ளார்.

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாங்குநேரி பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவத்துக்கு தி.மு.க-வை சேர்ந்தவர்கள் தான் காரணம் என பொய்யான குற்றச்சாட்டை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவல்துறையால் கைது செய்யப்பட்ட மாணவரின் தந்தை பாஜக உறுப்பினர் ஆவார். அவர், நாங்குநேரி வார்டு தலைவராக இருந்துள்ளார்.

பா.ஜ.க முன்னணி தலைவரிடம் நெருங்கி பழகியுள்ளார். இது அப்பகுதி மக்கள் அனைவருக்கும் தெரியும். இதையெல்லாம் மறைத்துவிட்டு திமுகவுக்கும், திமுக நிர்வாகிகளின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பொய்யான தகவலை அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கைதான மாணவரின் தந்தை முன்னாள் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்த புகைப்படம், பாஜக உறுப்பினர் அட்டை புகைப்படம் ஆகியவை உள்ளது. இதையெல்லாம் அண்ணாமலை மறைத்து தி.மு.க மீது அவதூறு பரப்புவது அருவருக்கத்தக்க செயலாகும்” இவ்வாறு ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 12-ம் தேதி அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஜாதியப் பிரச்சினைகள் காரணமாக, பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் பட்டியல் சமூக மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி இருவரும், சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. பள்ளி மாணவர்களிடையே ஜாதிய வேறுபாடுகள் அதிகரித்து வருவதும், ஆயுதங்கள் கொண்டு தாக்குவதும், எதிர்கால சமூகத்தை நினைத்து அச்சம் கொள்ள வைக்கிறது. மாணவர் சின்னதுரை, நன்றாகப் படிக்கும் மாணவர் என்றும், ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற்றவர் என்றும் அறிகிறேன். சிறந்த மாணவராக வருங்காலத்தில், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் வரும் வாய்ப்புள்ள மாணவர் ஒருவர். ஜாதிய வன்முறையால் முடக்கப்படுவதை சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அற்ப அரசியல் லாபங்களுக்காக வேறு வேறு சமூகங்களிடையே ஜாதி வெறியைத் தூண்டி, அதன் மூலம் ஆண்டாண்டு காலமாகப் பலனடைந்து வரும் கட்சி, தி.மு.க என்பதை அனைவரும் அறிவர்.

இந்த சம்பவத்திலும், தி.மு.க கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் காவல்துறையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன. உதட்டளவில் சமூகநீதி பேசி, தேர்தல் வாக்குகளுக்காக சமூகத்தில் ஜாதிய வேற்றுமையை வளர்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க-வின் செயல்பாடுகளின் விளைவுதான். இது போன்ற கொடூர சம்பவங்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.” என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment