Nanguneri Vikravandi Assembly By Polls Full Schedule: நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் அக்டோபர் 21-ல் வாக்குப் பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. முழு அட்டவணை இங்கே தரப்படுகிறது.
Advertisment
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்றம் மற்றம் நாடு முழுவதும் 64 தொகுதிகளுக்கு தேர்தல் தேதியை அறிவித்தார். இவற்றில் தமிழ்நாட்டில் நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளும் அடங்கும்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வசந்தகுமார் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதேபோல விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏ. ராதாமணி மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்தத் தொகுதியும் காலியானது. எனவே இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
Nanguneri, Vikravandi Assembly By Polls Full Schedule: நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் இடைத்தேர்தல் முழு அட்டவணை வருமாறு:
வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: செப்டம்பர் 23
வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாள் : செப்டம்பர் 30
வேட்புமனுக்கள் பரிசீலனை : அக்டோபர் 1
வேட்புமனுக்களை திரும்பப் பெற இறுதி நாள் : அக்டோபர் 3
வேட்புமனு பரிசீலனை : அக்டோபர் 5
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அக்டோபர் 5
வாக்குப் பதிவு: அக்டோபர் 21
வாக்கு எண்ணிக்கை: அக்டோபர் 24
நாங்குனேரி தொகுதி ஏற்கனவே காங்கிரஸ் வென்ற தொகுதி என்ற அடிப்படையில் அந்தத் தொகுதியை திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கியிருக்கிறார்கள். அன்று அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரின் ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக.வே போட்டியிட இருக்கிறது. திமுக, காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் கட்சியினரிடம் விருப்ப மனு பெறும் தேதிகளை அறிவித்திருக்கின்றன. முழு அளவில் இடைத்தேர்தலுக்கு அரசியல் களம் தயாராகி வருகிறது.