/tamil-ie/media/media_files/uploads/2019/10/a307.jpg)
Tamil Nadu Assembly Election, Nanguneri, Vikravandi Results
Nanguneri, Vikravandi Election Results 2019: நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இதையொட்டி இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இரு தொகுதிகளின் ரிசல்ட்டும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியும் காலியிடங்களாக இருந்தன. இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு கடந்த 21-ந்தேதி நடந்தது. நாங்குநேரி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 414. இதில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர். இது மொத்த வாக்குகளில் 66.35 சதவீதம். விக்கிரவாண்டி தொகுதியில் மொத்த வாக்குகள் 2 லட்சத்து 23 ஆயிரத்து 387. இதில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 659 வாக்குகள் பதிவாகின. இது 84.41 சதவீதம்.
இந்த இரு தொகுதிகளிலும், இதே நாளில் தேர்தல் நடைபெற்ற மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்கு இன்று (24-ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
நாங்குனேரி தொகுதிக்கான ஓட்டு எந்திரங்கள் திருநெல்வேலி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். விக்கிரவாண்டி தொகுதிக்கான வாக்குப் பதிவு எந்திரங்கள் விழுப்புரம் முத்தாம் பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டிருக்கின்றன.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. நாங்குனேரியில் மொத்தம் 22 சுற்றுகளில் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இதற்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 22 சுற்றுகள் எண்ணப்படுகிறது. காலை 10 மணி முதல் வாக்கு நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான உடனடித் தகவல்களுக்கு இந்த லைவ் ப்ளாக்கை தொடரவும்.
இடைத்தேர்தல் முடிவுகளை ஆங்கிலத்தில் படிக்க - Tamil Nadu By-election, Nanguneri, Vikravandi Results 2019 Live
Live Blog
Nanguneri Assembly Election Result, Vikravandi Election Result 2019: இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இரு தொகுதிகளின் ரிசல்ட்டும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: வரும் பொதுத்தேர்தலில் எப்படி நின்று விளையாடுகிறேன் என பாருங்கள். இரண்டு பணக்கார கட்சிகளான அதிமுகவும் திமுகவும் கொள்கைக் கட்சிகள் அல்ல. கோடி கட்சிகள் என்று விமர்சனம் செய்தார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவிக்கையில், இடைத்தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த மக்களின் மனநிலையை காட்டுவதாகக் கருதிவிட முடியாது என்று கூறியுள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக வெற்றி பெற்றுள்ளதைப் பற்றி கருத்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி: இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சரித்திரம் வாய்ந்த வெற்றி கிடைத்துள்ளது. திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகள் இந்த தேர்தலில் எடுபடவில்லை. குடிமராமத்து போன்ற சிறப்பு திட்டங்களை அதிமுக தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது என்று கூறினார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் தோல்வியடைந்தது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத் தேர்தல்களில் எதிர்கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத நிலை உருவாகி வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கடுமையான சூழலில் ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிடுவதற்கு துணிவுடன் முன்வந்து வேட்பாளராக போட்டியிட்ட ரூபி மனோகரனை பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத் தேர்தல்களில் எதிர்கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத நிலை உருவாகி வருகிறது.
— KS_Alagiri (@KS_Alagiri) October 24, 2019
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் தோல்வியடைந்தது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறாதது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. ஜனநாயகத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிற தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறாதது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. ஜனநாயகத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிற தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். pic.twitter.com/aPShMnz6M2
— KS_Alagiri (@KS_Alagiri) October 24, 2019
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் ஆளும் அதிமுக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான திமுகவும் காங்கிரஸும் தோல்வி அடைந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன்' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இடைத்தேர்தலில் இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும் நன்றி!
மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்று, வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, தொடர்ந்து உழைப்போம்!
கடந்த காலப் படிப்பினைகளுடன், எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம்! pic.twitter.com/BePwvwX0i4
— M.K.Stalin (@mkstalin) October 24, 2019
இடைத்தேர்தலில் வெற்றியை பரிசளித்த பொதுமக்களுக்கு நன்றி கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர்களை மகத்தான வெற்றிபெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும், இந்த வெற்றிக்காக அயராது உழைத்த கழக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் கழகம் சார்பில் இதயமார்ந்த நன்றி! #AIADMK pic.twitter.com/GIaYPShJtV
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 24, 2019
2 சட்டமன்ற தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றத்தை தொண்டர்களுடன் சேர்ந்து முதல் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கொண்டாடினர். இந்த புகைப்படங்களை முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
#AIADMK #VICTORY4AIADMK pic.twitter.com/gCS8wp2uA1
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 24, 2019
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களும் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு உழைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். நான் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்.
— Dr S RAMADOSS (@drramadoss) October 24, 2019
இடைத்தேர்தல் வெற்றி குறித்து ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் உழைத்த தோழாமைகட்சியினருக்கும், ச ம க வின் தொண்டர்களுக்கும வாழ்துக்களையும்,வாக்காளர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் @CMOTamilNadu
— R Sarath Kumar (@realsarathkumar) October 24, 2019
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தந்து ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் தொகுதியில் வெற்றியை பெற்றுத்தந்த தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் தேமுதிக சார்பில் நன்றி என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து விஜயகாந்த் தம்மை தொலைபேசியின் தொடர்பு கொண்டதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
”ஆளும் கட்சியின் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், சில கட்சிகள் திட்டமிட்டுக் கிளப்பிய சாதி உணர்வு ஆகியவற்றையும் மீறி, பல்லாயிரக்கணக்கான மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது, அண்ணாவின் கூற்று. அந்த அடிப்படையில் மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம். திமுக-வைப் பொறுத்தவரையில் வெற்றி பெற்றால் களிப்பிலாடுவதும், தோல்வியில் துவண்டு விடுவதும் இல்லை. கலைஞர் வழியில் அனைத்தையும் ஒன்றாகக் கருதும் பரிபக்குவம் பெற்றவர்கள் நாம்.
வாக்களித்தவர்களுக்கு நன்றி செலுத்தும் அதே நேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற மேலும் தொடர்ந்து உழைப்போம்.எப்போதும் தேர்தலுக்காக பணியாற்றுவது என்பது, தேர்தல் பணி மட்டுமல்ல, அஃது இயக்கப் பணியும் இணைந்தது தான். கழகத்தின் வளர்ச்சிக்காகத் தொண்டாற்றினோம் என்ற உணர்வை நீங்கள் அனைவரும் பெற்று, நிறைவு பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
2 சட்டமன்ற தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வெற்றி பெற்று தனது பலத்தை சட்டப்பேரவையில் மேலும்கூட்டியுள்ளது. பேரவையில் உறுப்பினர் எண்ணிக்கை மொத்தம் 234. இதில் அதிமுக - 122+2 (விக்கிரவாண்டி, நாங்குநேரி)- 124 ,திமுக - 100 காங்கிரஸ் - 7 ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1 ,சுயேட்சை - 1 ,(டிடிவி தினகரன்) சபாநாயகர் - 1 என அதிமுகவின் பலம் கூடியுள்ளது.
#ElectionResults2019: Counting in Vikravandi has drawn to a close, with the ruling AIADMK leading by a margin of 44,700 votes. EC to announce results soon.#Vikravandi #Bypolls2019
More at https://t.co/XYlZoUMMsK pic.twitter.com/icxz6Gpzzo
— The Indian Express (@IndianExpress) October 24, 2019
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கை குறித்த முழு விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்.
#ElectionResults2019: Counting in Nanguneri has drawn to a close, with the ruling AIADMK leading by a margin of 32,333.#Nanguneri#Bypolls2019
More at https://t.co/XYlZoUMMsK pic.twitter.com/Oca6sLtAh1
— The Indian Express (@IndianExpress) October 24, 2019
நடந்து முடிந்த 2 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. நாங்குநேரில் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை குறித்த முழு விபரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
அதிமுக வேட்பாளர் நாராயணன் 96, 562 வாக்குகள் பெற்று நாங்குநேரியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 32,33 வாக்குகள் வித்யாசத்தில் தோற்கடித்துள்ளார். நாங்குநேரியில் ரூபி மனோகரன் பெற்ற வாக்குகள் 61, 450. நாம் தமிழர் கட்சியின் ராஜநாராயணன் 2,622 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் நாராயணன் 85, 564 வாக்குகளை பெற்றுள்ளார். காங்கிரஸின் ரூபி மனோகரன் 56,535 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ராஜநாராயணன் 1,704 வாக்குகள் பெற்றுள்ளார். 26,029 வாக்குகள் வித்தியாசத்தில் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலை.
அதிமுக வேட்பாளர் நாராயணன் 81, 647 வாக்குகளை பெற்றுள்ளார். காங்கிரஸின் ரூபி மனோகரன் 54,421 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ராஜநாராயணன் 1,704 வாக்குகள் பெற்றுள்ளார். 27,226 வாக்குகள் வித்தியாசத்தில் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலை.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். அவர் 1 லட்சத்து 13 ஆயிரத்து 428 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவைச் சேர்ந்த புகழேந்தி 68,646 வாக்குகள் ஆகும். இருவருக்கும் இடையேயான வாக்குகள் வித்தியாசம் 44782 வாக்குகள் ஆகும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி 2,913 வாக்குகளை பெற்றார்.
ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி வருகிறார். இரண்டு தொகுதி வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார் முதல்வர். கூட்டணியில் இணைந்திருக்கும் கட்சிகள் அனைத்திற்கும் அவர் நன்றி கூறினார்.
அதிமுக 98,465 வாக்குகளை பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் 59,189 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி 2,608 வாக்குகளை பெற்றுள்ளது. 39,276 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக 17வது சுற்றில் முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் 35,489 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட உள்ள நிலையில் வெற்றியை உறுதி செய்தார் முத்தமிழ்ச்செல்வன்.
அதிமுக 98,465 வாக்குகளை பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் 59,189 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி 2,608 வாக்குகளை பெற்றுள்ளது. 39,276 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக 17வது சுற்றில் முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் 35,489 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட உள்ள நிலையில் வெற்றியை உறுதி செய்தார் முத்தமிழ்ச்செல்வன்.
தமிழக மக்கள் பாஜகவை எதிர்பார்க்க துவங்கி இருப்பதாக பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தான் காரணம் என்றும், பாஜகவின் பங்களிப்பு இடைத்தேர்தல் வெற்றிக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவிடுபொடியாக்கி அதிமுக வெற்றி என்றும் முதல்வரின் வழிகாட்டுதலுக்கு மக்கள் அளித்த வெற்றி இது என்றும், இதே வெற்றியுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். மேலும் இதே போன்று 2021ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்றும் அவர் அறிவித்தார்.
12,057 வாக்குகள் வித்தியாசத்தில் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 33,385 வாக்குகளை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 21,328 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 799 வாக்குகளை பெற்றுள்ளார்.
விக்கிரவாண்டியில் 10,355 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை பெற்று வருகிறது. அதிமுக தற்போது 27, 318 வாக்குகளை பெற்றுள்ளது.
திமுக - 16,963 வாக்குகளை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி - 696 வாக்குகளை பெற்றுள்ளது. நாங்குநேரியில் தேர்தல் முடிவுகள் மிகவும் பொறுமையாக வெளியாகி வருகிறது.
தமிழகத்தின் விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளிலும், புதுச்சேரியின் காமராஜ்நகர் தொகுதியிலும் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைப்பெற்றது. இதற்கான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையில் 1 மணி நேரத்திலேயே காமராஜ்நகர் தொகுதியின் வெற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 14,782 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றிருக்கிறார்.
விக்ரவாண்டி தொகுதியின் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 2,047 வாக்குகள் அதிகமாகப் பெற்று முன்னிலைப் பெற்றிருக்கிறார். அதேபோல், நாங்குநேரி தொகுதியில் 1,600 வாக்குகள் கூடுதலாக பெற்று அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலை வகிக்கிறார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி வாக்கு எண்ணும் மையத்துக்கு வருகை புரிந்துள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியனும் வாக்கு எண்ணும் மையத்துக்கு வருகை தந்துள்ளார். தற்போது தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
விக்ரவாண்டி தொகுதி திமுக வசமிருந்தது, அங்கு எம்.எல்.ஏ-வாக இருந்த ராதாமணி மரணமடைந்ததால், அத்தொகுதி காலியானது. நாங்குநேரி திமுக-வின் கூட்டணி கட்சியான காங்கிரஸிடமிருந்தது. அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தக்குமார், நாடாளுமன்ற உறுப்பினரானதால், அத்தொகுதிக்கு வேறு ஒரு சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை உருவானது. தற்போது நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில், இவ்விரு தொகுதிகளையும் திமுக கூட்டணி தக்க வைத்துக் கொள்ளுமா, அல்லது அதிமுக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அதோடு, விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு எண்ணும் அறைக்கு உள்ளே முகவர்கள் காலை 7.30 மணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். வளாகத்திற்கு செல்போன் எடுத்துச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை
வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் ஒரு ஏஜெண்டு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நெல்லை மற்றும் விழுப்புரம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights