/tamil-ie/media/media_files/uploads/2019/08/election-commission.jpg)
TN Live updates : Nanguneri byelection
Nanguneri Vikravandi By Election: தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது
அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்ளிட்ட 12 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முத்தமிழ்செல்வனுக்கு இரட்டை இலை சின்னமும், புகழேந்திக்கு உதயசூரியன் சின்னமும், கந்தசாமிக்கு கரும்பு விவசாயி சின்னமும், இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனருமான கௌதமனுக்கு சாவி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜ நாராயணன், தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த காட்பிரே வாஷிங்டன் நோபுள் இவர்களுடன் 19 சுயேட்சைகள் களத்தில் உள்ளனர்.
அதோடு, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் பிரவினா மதியழகன் உட்பட 9 பேர் போட்டியிடுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.