வீடியோ விவகாரம்: என்னை அசிங்கப்படுத்தலாம் என கருதுவது கை கூடாது – நாஞ்சில் சம்பத்

Nanjil Sampath denying on he with a woman video issue: நாஞ்சில் சம்பத் போன்ற ஒருவர் விடுதி அறையில் ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கிற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு நாஞ்சில் சம்பத், தன்னை அசிங்கப்படுத்தலாம் என்று கருதுவது கை கூடாது…

By: September 29, 2019, 3:23:35 PM

Nanjil Sampath denying on he with a woman video issue: நாஞ்சில் சம்பத் போன்ற ஒருவர் விடுதி அறையில் ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கிற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு நாஞ்சில் சம்பத், தன்னை அசிங்கப்படுத்தலாம் என்று கருதுவது கை கூடாது என்று அந்த வீடியோவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதி, அனல் பறக்கப் பேசும் மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். இவர் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகி டிடிவி தினகரனின் ஆதரவாளராக செயல்பட்டுவந்தார். பிறகு, டிடிவி தினகரன் புதியதாக கட்சி தொடங்கியபோது அதில் திராவிடம் மற்றும் அண்ணா பெயர் இல்லை என்று கூறி அண்ணாவையும் திராவிடத்தையும் புறக்கணித்த இடத்தில் தனக்கு வேலை இல்லை என்று இனி அரசியலில் இருந்தே விலகுவதாகக் கூறினார்.

இதனிடையே, நாஞ்சில் சம்பத் திரைப்படத்திலும் நடித்தார். இந்நிலையில், தனியார் விடுதி ஒன்றில் நாஞ்சில் சம்பத் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர், ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. வீடியோவில் இருப்பது நாஞ்சில் சம்பத் என்று கூறி அந்த வீடிவை குறிப்பிட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர்.

நாஞ்சில் சம்பத் இந்த வீடியோவுக்கு மறுப்பு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் என் உறவுகளுக்கு என்று குறிப்பிட்டு “என் எச்சிலை மைய்யாக்கி எழுதியவர்களை தாண்டித்தான் இந்த உயரத்திற்கு வந்துருக்கிறேன். ஏனோ தானோ பேர்வளிகள் என்னை அழுக்காக்கி அசிங்கப்படுத்தலாம் என்று கருதுகிறார்கள். அவர்கள் கருதுவது கை கூடாது; சங்கு சுட்டாலும் வெண்மை தரும் சோதனைகள் வந்தாலும் என் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் எப்போதும் நடப்பேன். மானமும் மரியாதையும் என் மரபணுவோடு கலந்தது. புரிந்தவர்களுக்கு புரிந்தா செரி. என் பயணம் தொடரும்.” என்று தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Nanjil sambath denying on he with a woman video issue

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X