Advertisment

மின் சிக்கனம் தேவை.. கட்டண உயர்வுக்கு மாநில அரசு பொறுப்பில்லை.. நாஞ்சில் சம்பத்

மின்சார கட்டணம் உயர ஒன்றிய அரசுதான் காரணம். மின்சார கட்டணம் குறையாது. மக்கள் மின்சார பயன்பாட்டை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் நாஞ்சில் சம்பத் கூறினார்.

author-image
WebDesk
New Update
Nanjil Sampath has accused the Union government of increasing electricity tariff in Tamil Nadu

நாஞ்சில் சம்பத்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைவர் கிடைக்கு. அது ஒரு பண்டமாற்று சரக்கு. இதனை தமிழ்நாடு மக்கள் விரைவில் உணர்வார்கள் என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.

Advertisment

சென்னையில் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் சைதை சாதிக் பேச்சு குறித்து கேள்வியெழுப்பினார்கள்.

அதற்குப் பதிலளித்த நாஞ்சில் சம்பத், “திராவிட மேடைகள் ஒரு பல்கலைக்கழகம். தம்பி சைதை சாதிக் அவ்வாறு பேசியிருந்தால் அது தவறு. அவரின் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்பான கேள்விக்கு, “அவர் தலைவர் கிடையாது. இறக்குமதி சரக்கு” என்றார்.

பின்னர் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான கேள்விக்கு நாஞ்சில் சம்பத், “தமிழ்நாடு விபத்துக்களின் பலிகிடா ஆகிவிடக்கூடாது என்பதற்காக போடப்பட்ட சட்டம் இது. இதை காவல்துறையினர் நேர்மையாக பயன்படுத்த வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, மின்சார கட்டண உயர்வை மறைக்க இதுபோன்ற விலையேற்றம் மற்றும் சர்ச்சைகள் எழுப்பப்படுகின்றனவா? என கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த நாஞ்சில் சம்பத், “மின்சார கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க முடியாது. ஒன்றிய அரசின் உதய் திட்டத்தை கடந்த ஆட்சியாளர்கள் ஒப்புதல் அளித்தனர்.

இதனால்தான் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இதற்கு ஒன்றிய அரசுதான் காரணம். இதை நான் மேடைகளில் கூட விவாதிப்பதற்கு தயார். மேலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் குறைவாகதான் உள்ளது.

ஆகவே மின்சார கட்டணம் குறைவதற்கு வாய்ப்பில்லை. மக்கள் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மின்சாரத்தை சேமிக்கவும் தயாராகிக் கொள்ள வேண்டும்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nanjil Sampath Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment