Nanjil Sampath speech Tamil News: நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சி ‘மக்கள் சபை’ எனும் விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இந்த வார நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு ஈரோடு வேளாளர் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது பேசிய நாஞ்சில் சம்பத், பாரதிய ஜனதா கட்சியினரை பொறுக்கி என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சி நடந்த அரங்கில் பாஜக- வினரும் அமர்ந்திருந்த நிலையில், அவர்கள் அனைவரும் மொத்தமாக எழுந்து தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து கண்டித்தனர். பலரும் அங்கிருந்த நாற்காலிகளை விட்டு எழுத்தனர். மேலும், நாஞ்சில் சம்பத் பேசியது தவறு, அதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், நிகழ்ச்சி நடந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டபட்ட நிலையில், அந்த வீடியோ பாஜக- வினர் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
ஈரோடு வெள்ளாளர் கல்லூரியில் நாஞ்சில் சம்பத் அவர்கள் பேசுகையில் பாரதிய ஜனதா கட்சியினர் பொறுக்கி என்றுபேசியவுடன் அரங்கம் முழுவதும் இருந்த மக்கள் சம்பத் நாஞ்சில் சம்பத் அவர்களை பேசியதை தவறு என்று திரும்ப படித்துக் கொள்ள வேண்டும் என்று கூறி மேடை ஏறினார்கள் pic.twitter.com/6EgFXI1GKh
— 🚩 என் தேசம் இந்தியா🇮🇳 (@VjiayanS) December 23, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil