கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தான் சங்க அரங்கில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய
நாராயண் சேவா சன்ஸ தான் சங்க தலைவர் ரஜத்கவுர் கூறுகையில், ராஜஸ்தான் மாநிலம் உயத்பூரை சேர்ந்த இந்த நாராயண் சேவா சன்ஸ் தான் சங்கம், விபத்துகள் அல்லது பிற நோய்களால் உடல் ஊனமுற்ற நபர்களுக்கு உதவி செய்யும் ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு கடந்த 39 ஆண்டுகளாக இச்சேவையை செய்து பத்ம ஸ்ரீ விருது பெற்ற அமைப்பாக உள்ளது. இதுவரை சுமார் 42,000-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு தேவையான காலிபர்கை மற்றும் காலிபர் காலுகளை அவர்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக, கோவையில் தனது 1021-வது சிறப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்த முகாம் வருகின்ற 28-ம் தேதி தடாகம் சாலை, கே.என்.ஜி புதூர் பிரிவு பகுதியில் உள்ள மகேஷ்வரி பவனில் நடைபெற உள்ளது.
1000 நபர்களுக்கு தேவையான காலிபர் அளவீடு எடுக்கும் முகாம் நடைபெற உள்ளது. பின்னர் 45 நாட்களில் மாற்று திறனாளிகளின் அளவுக்கு ஏற்ற காலிபர்கள் தயார் செய்து அவர்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே 800 விண்ணப்பங்கள் தற்போது பூர்த்தி செய்து முடிந்த நிலையில் குறைந்த அளவிலான எண்ணிக்கை உள்ளது எனவே காலிபர் தேவையான மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து பயணடைய வேண்டும் என்றார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொது ராஜஸ்தான் சங்க தலைவர் கெளதம் சந்த், ரஜித் கவுர், சந்தோஷ் முந்த்ரா, சமூக ஆர்வலர் கமல் கிசோர் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“