Advertisment

நட்டாற்றில் தத்தளித்த அ.தி.மு.க-வை நங்கூரம் இட்டு காத்தது பா.ஜ.க: செல்லூர் ராஜுக்கு நாராயணன் திருப்பதி பதிலடி

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார்.

author-image
WebDesk
Jun 10, 2023 19:29 IST
sellur raju

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார்.

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது போல். தேர்தலில் அவர்கள் தயவில் நாங்கள் வெற்றி பெற போவதில்லை. எங்களுடன் பயணித்தால் மட்டுமே அவர்களால் கரைசேர முடியும். இல்லாவிட்டால் நட்டாற்றில் போக வேண்டிய பரிதாபம் அவர்களுக்கு ஏற்படும்", என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- "கரை சேர முடியாமல், பரிதாபமாக நட்டாற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை நங்கூரமிட்டு பாதுகாத்த வரலாற்றை மறந்து விட்டு தானாகவே கரை சேர்ந்ததாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள், 'இனி நங்கூரம் தேவையில்லை' என்ற அலட்சியப்படுத்தும் போக்கு தான் பரிதாபத்திற்குரியது", என தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment