/tamil-ie/media/media_files/uploads/2018/12/a199.jpg)
NASA Calender 2019 dindugal boy's painting - நாசா காலண்டரில் திண்டுக்கல் மாணவனின் ஓவியம்
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியை சேர்ந்த மாணவன் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் போட்டிகள் நடத்தி, அதில் தேர்வாகும் படங்களை நாசா, தனது காலாண்டரில் அச்சிட்டு வருகிறது. இந்த நிலையில், 2019-ம் ஆண்டுக்கான போட்டியில் கலந்து கொண்ட 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் நடராஜன் - சந்திராமணி தம்பதியரின் மகன் தேன்முகிலன் வரைந்த படம் தேர்வு பெற்று, நாசாவின் காலண்டரில் இடம் பிடித்துள்ளது.
2019-ம் ஆண்டு காலண்டருக்கான ஓவியங்களை தேர்வு செய்ய நடந்த போட்டியில் 194 நாடுகளைச் சேர்ந்த 4 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் இறுதியாக 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்போட்டியில் பங்கேற்றதில் தேன்முகிலனின் ‘விண்வெளியில் உணவு’ என்ற தலைப்பிலான ஓவியம் தேர்வு செய்யப்பட்டு நவம்பர் மாத காலண்டர் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஓவியப்போட்டியிலும் இந்த பள்ளி அனுப்பிய ஓவியம் தேர்வாகியிருந்தது குறிப்பித்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.