Advertisment

சேலம் ரயில் கொள்ளை சம்பவத்தில் தமிழக சிபிசிஐடிக்கு கைகொடுத்த நாசா

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்களை கைது செய்து விசாரணை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சேலம் ரயில் கொள்ளை, நாசா உதவி

சேலம் ரயில் கொள்ளை, நாசா உதவி

சேலம் ரயில் கொள்ளை விசாரணையில் திடீர் திருப்பம்.  சேலத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த சேலம் - சென்னை எக்பிரஸ் ரயிலில் கொள்ளை சம்பவம் ஒன்று 2016ம் ஆண்டு நடைபெற்றது.

Advertisment

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான சுமார் 342 கோடி ரூபாய் அந்த ரயிலில் கொண்டு வரப்பட்டது. அவை அனைத்தும் ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் ஆகும்.

அந்த செய்தியை அறிந்த மர்ம கும்பல் ஒன்று, ரயிலின் மேற்கூரையில் இரண்டடிக்கு ஒன்றரை அடி துளை போட்டு உள்ளே இறங்கி 5.75 கோடி ரூபாயினை கொள்ளையிட்டு சென்றனர் மர்ம நபர்கள்.  அந்த ரயில் 9ம் தேதி காலை எழும்பூர் ரயில் நிலையம் வந்த பின்பு தான் பணம் கொள்ளை போனது கண்டறியப்பட்டது. இது தொடர்பான வழக்கினை இரண்டு வருடம் நடத்தியும் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

சேலம் ரயில் கொள்ளை வழக்கில் உதவிய நாசா

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சகத்தின் மூலமாக நாசாவின் உதவியை நாடியிருந்தது தமிழக சிபிசிஐடி.  நாசா, சேலத்தில் இருந்து சென்னை வரையிலான 350 கிலோமீட்டர் பயணத்தை அடிப்படையாக கொண்டு சுமார் 20 புகைப்படங்களை சிபிசிஐடிக்கு கொடுத்துள்ளது நாசா ஆராய்ச்சி மையம்.

இந்த 350 கிலோ மீட்டர் தொலைவிலான பயணத்தில் சுமார் 100 செல்போன் கோபுரங்களில் பதிவான அழைப்புகளையும் ஆராய்ச்சி செய்து வருகிறது சிபிசிஐடி.

தற்போதைக்கு இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களின் அடிப்படையில் இதுவரை பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 11 கட்டிடத் தொழிலாளிகளை கைது செய்து விசாரணை செய்து வருகிறது சிபிசிஐடி.

இத்தனை மாதங்கள் விசாரணைக்குப் பிறகு கிடைத்த இந்த துப்பினை பயன்படுத்தி மிகவும் குற்றவாளிகளை விரைவாக பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள் தமிழக சிபிசிஐடி.

Salem Cbcid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment