நம் பூமி என்கிற கிரகத்திற்கு வெளியே பல்வேறு தகவல்களை நித்தமும் சேகரித்து உலகத்தையே கற்பித்து வருகிறது நாசா.
உதாரணத்திற்கு, செவ்வாய்க்கிரகத்தில் நீர் இருக்கிறதா, மனிதர்கள் வாழ்வதற்கான உகந்த இடமாக அமையுமா போன்ற ஆய்வுகளை நாசா நடத்தியுள்ளது.
சென்னை அண்ணாசாலையின் ஜெமினி வளைவில் அமைந்துள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் நாசாவின் 'மார்ஸ் ரோவர் ஆப்பர்ச்சூனிட்டியின்' முழு அளவிலான மாதிரி பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை டிசம்பர் 8ஆம் தேதி, அமெரிக்கத் துணைத் தூதர் ஜூடித் ரேவின் திறந்து வைத்தார்.
2023 ஜனவரியில் இருந்து திங்கள் முதல் வெள்ளி, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்தக் கண்காட்சி பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்படும். கார்னெல் பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த மாதிரி, முதலில் வாஷிங்டன் டி.சி-யில், துபாய் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இந்த மாதிரி சென்னை வந்தடைந்துள்ளது.
செவ்வாய்க்கிரக ஆய்வுகள் குறித்த தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது என்று உரிமையாளர்கள் கூறுகின்றனர். எனவே, மாணவர்களை கண்காட்சிக்கு அழைத்து வர விரும்பும் பள்ளிகள், தங்களது மின்னஞ்சலை அனுப்பலாம்: ChennaiAmCenter@state.gov | தொலைபேசி: 044-2857-4223
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil