அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் முன்னாள் அமைச்சர் நாசர் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டு புதிய அமைச்சராக டி.ஆர்.பி ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு அவர் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இரண்டு முறை அமைச்சர் மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முதல் முறையாக அமைச்சர் பதவியிலிருந்து நாசர் நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் சாதனைப் விளக்கப் பொதுக்கூட்டம் திருவேற்காடு பகுதியில் நேற்று நடைபெற்றது. திருவேற்காட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாசர் பங்கேற்று உரையாற்றினார். சென்னீர் குப்பம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு அவர் பேச சென்றபோது, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட செய்தி வெளியானது. இதனால் அவர் கூட்டத்தில் பங்கேற்காமல் அப்படியே சென்றுவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“