வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாத அளவிற்கு அதிமுக வெற்றியைப் பெறும் என்று சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
சிவகங்கை தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நத்தம் விஸ்வநாதன், பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு திமுகவிற்கு இறங்கு முகம் தான் என்றும், மக்களிடத்தில் வெறுப்பையும் அருவருப்பையும் திமுக சம்பாதித்து இருக்கிறது என்றார்.
இன்று தேர்தல் நடந்தாலும் அவர்கள் தோழ்வியடைந்து வீட்டுக்குப் போவது உறுதி என்றும் இந்த முறை திமுகவை வீழ்த்துவது எளிமையானது என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இந்த ஆட்சியில் தந்தை மகனை பாராட்டுகிறார். மகன் தந்தையை பாராட்டுகிறார் இதைத் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை என குற்றம் சாட்டினார்.
தொடர் தோல்வியை சந்தித்ததால் அதிமுகவினர் சோர்ந்து போய்விட்டதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது. 13 ஆண்டுகள் தோல்வியை சந்தித்த திமுக மீண்டும் ஆட்சியை பிடித்த போது, நாம் பெற்ற தோல்வி சாதாரண தோல்வி எளிதில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாத அளவிற்கு அதிமுக வெற்றியைப் பெறும் என்றார்.
தொடர்ந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்திலேயே அதிமுக இல்லாததால்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்றவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வா - அதிமுக வா என்று தான் மக்கள் மத்தியில் முன் வைக்கப்படும் என நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“