Advertisment

கன்னியாகுமரியில் மோடி, திருமயம் கோட்டையில் அமித்ஷா ; ஓரிரு நாளில் தமிழகம் வரும் பாஜ.க தலைவர்கள்

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தற்போது இறுதி கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Amit shah Modi

அமித்ஷா - மோடி

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது புதுக்கோட்டையில் சாமி தரிசனம்  செய்ய முடியாத நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் மீண்டும் ஆன்மீகப் பயணமாக தமிழகம் வருகிறார்.

Advertisment

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ரத்து செய்யப்பட்ட திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்ய உள்ளார். நாட்டில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 கட்ட நாடாளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்து விட்டன. இதனால் வடநாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில்தான் ஏழாம் கட்டத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் மீண்டும் தமிழகம் வருகிறார். நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழகம் வருகை தருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அமித்ஷாவும் வருகை தர உள்ளார். இது தற்போது கவனம் பெற்றுள்ளது.

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தற்போது இறுதி கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரசாரம் வரும் 30ம் தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து தான் அன்றைய தினம் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தமிழ்நாடு நோக்கி வருகின்றனர். பிரதமர் மோடி கன்னியாகுமரி செல்லும் நிலையில் அமித்ஷா புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்துக்கு வருகை தர உள்ளார்.

அதாவது தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலையொட்டி பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். கடந்த ஏப்ரல் 12ம் தேதி அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார்.

அன்றைய தினம் அவர் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன்யாதவை ஆதரித்து வாகன பேரணி செய்வதாகவும், திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் - அருள்மிகு ராஜராஜேஸ்வரி உடனுரை சத்யவாகீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் திருமயம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மழை பெய்தது. இதனால் மதுரையில் இருந்து அமித்ஷா செல்லும் ஹெலிகாப்டர் திருமயத்தில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷாவின் சாமி தரிசனம் மற்றும் அங்கு நடைபெற இருந்த வாகன பேரணி ஆகியவை ரத்து செய்யப்பட்டன. தடையான தனது ஆன்மீகப் பயணத்தை மீண்டும் அமித்ஷா துவக்கி உள்ளார். அதன்படி திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். அவர் மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கி அங்கிருந்து திருமயம் கோட்டை பைரவர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார்.

ஏற்கனவே பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ளார். அதன்படி பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். நாளை மறுநாள் மே 31, ஜூன் 1 ஆகிய 3 நாட்கள் பிரதமர் மோடி கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட உள்ளார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு ஜுன் 1ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் கன்னியாகுமரியில் தியானத்தில் ஈடுபட உள்ள நிலையில் அமித்ஷாவும் தமிழகம் வருவது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment