scorecardresearch

நீட் பற்றி குழப்பமான மனநிலையை உருவாக்க வேண்டாம்: குழந்தைகள் உரிமை தேசிய ஆணைய உறுப்பினர்

சமூக விரோத கும்பல் நீட்டை மாற்றி மாற்றி சொல்கிறார்கள். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவையில் ஆய்வு மேற்கொண்ட தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறினார்.

National children rights commission member, சமூக விரோத கும்பல் நீட்டை மாற்றி மாற்றி சொல்கிறார்கள்; தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர், National children rights commission, anti social mob comment on NEET
தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த்

சமூக விரோத கும்பல் நீட்டை மாற்றி மாற்றி சொல்கிறார்கள். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் பற்றி குழப்பமான மனநிலையை உருவாக்க வேண்டாம் என்று கோவையில் ஆய்வு மேற்கொண்ட தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறினார்.

கோவை லட்சுமி மில் அருகே உள்ள கூர்நோக்கு இல்லத்தில் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை லட்சுமி மில் அருகில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை வடக்கு தாசில்தார் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பின் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.

தமிழ்நாட்டில் உள்ள மற்றும் ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு மேற்கொண்டம். மார்ச் 26 முதல் ஏப்ரல் 12க்குள் ஐந்து மாநிலங்களில் 21 இடம் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆய்வு தொடங்கி தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளோம். கோவையில் கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து கூர்நோக்கு இல்லங்களையும் ஆப் மூலம் கண்காணிக்கிறோம். இதை தொடர்ந்து இன்று ஆய்வு இங்கு மேற்கொண்டுள்ளோம். இதுவரை 14 இடத்தில் ஆய்வு முடிந்தது.அடுத்து தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.
கோவையைப் பொறுத்தவரை கூர் நோக்கு இல்லம் சிறப்பாக உள்ளது.

கோவை மாவட்ட காவல்துறை ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற தலைப்பில் மாணவர்களை நேரில் சந்தித்து வருகின்றனர். கோவையில் குழந்தை திருமணம் அதிகமாக உள்ளது. இந்த தகவல் வெளிவர காரணம் ரெக்கார்டு அதிகளவில் ஆகிறது. இதுவரை இதன் மூலம் 250 குழந்தை திருமணம் தடுக்கப்பட்டுள்ளது.

மதமாற்றம் , போதைப் பொருள் அதிகமான புகார்கள் வருகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிளாக் ரிவ்யூ செய்வோம். முதற்கட்டமாக கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டம். கோவையில் எந்த புகாரும் இல்லை. கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்திற்கு நேஷனல் கமிஷன் பாராட்டுக்கள் தெரிவிக்கிறது.

கோவை மாவட்டத்திற்கு விரைவில் குழந்தைகள் தங்களின் குறைகளை தெரிவிக்க பெஞ்ச் அமைக்கிறோம்.

நீட் தொடர்பாக ஒரு மாணவி ரயில் முன் பலியானதாக செய்தி வந்தது. நீட் குறித்து அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

படிக்கும் போது மாணவரின் மனச்சோர்வு என்ன என்பது தெரியும். தேர்வு என்பது முக்கியம். பிரதமர் பரிட்சைக்கு பயமேன் என நிகழ்வு நடத்துகிறார்.

நீட் மாற்ற முடியாத ஒன்று என உறுதி செய்து விட்டனர். சமூக விரோத கும்பல் நீட்டை மாற்றி மாற்றி சொல்கின்றனர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையத்தின் சார்பில் ரயில் முன் பாய்ந்த பெண்ணுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவ சீட்டுக்கு நீட் அவசியம். அதை உறுதி செய்து விட்டனர்.

தமிழக அரசு தேசிய குழந்தைகள் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். சமூக வலைதளத்தில் நீட் குறித்து அவதூறு பரப்புகின்றனர்.அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சில இடங்களில் மதமாற்றம் மற்றும் போதைப்பொருள் புகார்கள் அதிகம் வருகிறது.
கோவையில் ஆனால் அது போன்று இல்லை.

குழப்பமான மனநிலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டாம். தேர்வுகள் என்பது மன உளைச்சல் ஆகக்கூடாது.

கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் 4 ஆலோசகர்கள் உள்ளனர். நீலகிரி ஈரோடு கோவை திருப்பூர் இணைந்த இந்த கூர் நோக்கு இல்ல அறிக்கையை நாங்கள் கடிதம் மூலமாக ஆட்சியருக்கு பின்னர் தருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தி: பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: National children rights commission member says anti social mob comment on neet