Advertisment

மாநில அளவில் ஆணையம் உருவாக்க வேண்டும் - தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் பேட்டி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. 

author-image
WebDesk
New Update
Sanitary workers commission

மாநில அளவில் ஆணையம் உருவாக்க வேண்டும் - தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் பேட்டி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து அத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. 

Advertisment

ஆய்வு கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த வெங்கடேசன்,  இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் குறிப்பாக சம்பளம் குறித்தான பிரச்சனை தான் இருந்ததாகவும் தெரிவித்தார். ஒரு வார காலமாக கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் மேலதிகாரிகளுக்கு இது குறித்து தெரிவிப்பதாக நாங்கள் கூறி இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். சம்பள விஷயத்தில் சில குழப்பங்கள் உள்ளதாக தெரிவித்த அவர் State Minimum Wages தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லி அரசாங்கம் தெரிவித்து நடைமுறையில் உள்ள நிலையில் மற்றொரு அரசாணையில் தமிழ்நாட்டில் பொதுவாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் ஊதியத்தை நிர்ணயம் செய்யலாம் என்பதும் உள்ளதாகவும் PWD துறையினர் ஒரு ஊதியத்தை நிர்ணயிப்பார்கள் எனவும் தெரிவித்தவர் தமிழக அரசாங்கம் இந்த ஊதியங்களில் எந்த ஊதியம் குறைவாக உள்ளதோ அதனை கொடுக்கலாம் என்று தெரிவித்ததால் அதிகாரிகள் குழம்பி உள்ளதாக தெரிவித்தார். இது போன்ற குழப்பங்கள் கோவையில் மட்டும் இருப்பதாகவும் மற்ற மாவட்டங்களில் இல்லை எனவும் கூறினார். இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியர் 715 ரூபாய் தர வேண்டும் என்று அரசாணை வெளியிட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் முழுமையாக ஆய்வு செய்து தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். அதே சமயம் மாநகராட்சி மேயர் தலைமையிலும் 648 ரூபாய் என்ற தீர்மானம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்டுள்ளதாகவும் ஆனால் தீர்மானம் போடப்பட்டு செப்டம்பர் மாதம் வரை அந்த தொகை தரப்படாமல் இருந்ததாக தெரிவித்த அவர் எனவே தொழிலாளர்கள் அனைவரும் ஜனவரி மாதத்தில் இருந்து அந்த ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கிறார்கள் என்றார். 

பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் Minimum Wages இருக்கும் அதேபோல் மத்திய அரசிடமும் Minimum Wages இருக்கும் நேரத்தில், எந்த ஊதியம் அதிகமாக உள்ளது அதனை பின்பற்றும்படி மத்திய அரசு தெரிவிப்பதாக கூறினார். ஆனால் தமிழ்நாட்டில் இது அப்படியே மாறுபட்டு உள்ளதாகவும், எது குறைவாக உள்ளது அதனை தர வேண்டும் என்று கூறுவதாகவும் தெரிவித்த அவர் அந்த அரசாணையை தமிழக அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

மேலும், எந்த ஊதியம் அதிகமாக உள்ளதோ அதனை தமிழக அரசாங்கம் வழங்க வேண்டும் என ஆணையத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார். ஏனென்றால் இந்த வேலையை பொறுத்தவரை வேறு யாராலும் செய்ய முடியாது என தெரிவித்தார். கொரோனா காலத்திலும் தூய்மை பணியாளர்களின் பணியை யாராலும் மறக்க முடியாது என தெரிவித்த அவர், கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் காவல்துறையினர் அரசு அலுவலர்கள் மூன்று துறையினருக்கும் ஊதியம் அதிகமாக இருந்ததாகவும் ஆனால் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் மிகவும் குறைவாக வழங்கப்பட்டதாக தெரிவித்தார். 

கொரோனா காலத்தில் மற்ற துறைகளை காட்டிலும் தூய்மை பணியாளர்கள் பலரும் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் இவர்களுக்கு எந்த தொகையை அரசு நிர்ணயம் செய்தாலும் என்னை பொறுத்தவரை அது குறைவு தான் என்றார். எனவே தமிழக அரசாங்கம் தற்பொழுது உள்ள அரசு ஆணையை மறுபரிசீலனை செய்து எந்த ஊதியம் அதிகமாக உள்ளதோ அதனை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.  

தமிழ்நாட்டிலேயே மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்கின்ற ஊதியம் தான் வழங்கப்படுவதாகவும் கோவை மாவட்டத்தில்தான் இதற்கு முன்பிருந்த மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த தொகையை யாரும் செயல்படுத்தவில்லை என தெரிவித்தார். எனவே தமிழக அரசாங்கம் கோவை மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி முன்னாள் மாவட்ட ஆட்சியர் அறிவித்த 715 ரூபாயை தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

கோவை அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்து நிலையில் மருத்துவமனை முதல்வரிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் அப்போது மருத்துவமனை முதல்வர் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் சிலர் மீது குறை கூறியதாக தெரிவித்தார். மேலும் அங்கு ஒரு மேனேஜர் மேல் தான் குற்றச்சாட்டு சாட்டப்படுவதாகவும் எனவே அவரை நீக்க வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். 

பி.எஃப் தொகையை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தற்பொழுது புதிதாக வந்துள்ள கான்ட்ராக்டர் அந்தத் 648 ரூபாய் தொகையை தருவதாக தெரிவித்துள்ளார் என கூறினார். அதேசமயம் பழைய மாவட்ட ஆட்சியர் அறிவித்த 715 ரூபாயை முடிவு செய்தால் அந்தத் தொகையை தர வேண்டும் என தெரிவித்தார். 

மேலும் ஆணையம் சார்பில் மூன்று முக்கியமான கோரிக்கைகள் இருப்பதாக தெரிவித்த அவர், காண்ட்ராக்ட் சிஸ்டத்தையே ஒழிக்க வேண்டும் என தெரிவித்த அவர், இந்த காண்ட்ராக்ட் சிஸ்டம் இருப்பதால்தான் தொழிலாளர்களுக்கு சரியாக சம்பளம் இருப்பதில்லை விடுமுறை அளிப்பதில்லை தனிப்பட்ட முறையில் இடமாற்றம் அளிப்பது போன்ற செயல்கள் செய்யப்படுவதாக போவார்கள் எழுவதாகவும் அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்றே தெரிவதில்லை என தெரிவித்தார். எனவே இந்த கான்ட்ராக்ட் சிஸ்டத்திற்கு பதிலாக கர்நாடக பின்பற்றப்படும் DPS (Direct Payment System) அல்லது ஆந்திராவில் பின்பற்றப்படும் Contractual Worker Corporation என்ற முறையை பின்பற்றலாம் என தெரிவித்தார். மேலும் தூய்மை பணியாளர்களுக்காக தேசிய அளவிலான ஆணையம் இருக்கும் பொழுது மாநில அளவிலான ஆணையத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.  

கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உடை வாங்குவதற்காக 2022-23ம் ஆண்டுக்காக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் 2023 முடிகின்ற இந்நேரத்தில் ஆவது அந்த நிதியை பெற்று தர வேண்டும் என மாநகராட்சி ஆணையாளரிடம் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். (இதன் மூலம் 2023 ஆம் ஆண்டு அந்த நிதி தற்பொழுது வரை பயன்படுத்த படவில்லை என தெரிகிறது). 

தூய்மை பணியாளர்களில் பலருக்கும் பிஎஃப் இஎஸ்ஐ நம்பர் தெரிவதில்லை என தெரிவித்த அவர் அவர்களது ஐடி கார்டிலேயே அந்த நம்பரை பதிவு செய்யும்படி தெரிவித்துள்ளதாக கூறினார். வெள்ளலூர் குப்பை கிடங்கில் இயந்திரத்திற்குள் சிக்கி படுகாயம் அடைந்துள்ள நபர் குறித்தான கேள்விக்கு பதில் அளித்தவர், பாதிக்கப்பட்டவரை நேரடியாக சென்று பார்த்ததாகவும் காண்ட்ராக்டர் பாதிக்கப்பட்டவருக்கு இன்சூரன்ஸ் போடவில்லை என்றால் முழு செலவையும் அந்த காண்ட்ராக்டர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறினார். 

பாதிக்கப்பட்டவர் குணமடைந்து திரும்புவதற்கு குறைந்தது இரண்டு வருடங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறி இருப்பதாகவும் அந்த இரண்டு வருடத்திற்கான அனைத்து செலவுகளையும் காண்ட்ராக்டர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு ஏதேனும் அரசு வேலை வழங்குவது குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் பேசியிருப்பதாக தெரிவித்தார். 

மேலும், அந்த சம்பவத்தை எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் அவருக்கு அரசு வேலை கிடைப்பதில் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அதே வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகளை எடுக்கும் பொழுது சிவகாமி என்ற பெண்மணி உயிரிழந்த நிலையில் அக்குடும்பத்தினருக்கு தற்பொழுது வரை எந்த உதவியும் வழங்கப்படாதது குறித்தான கேள்விக்கு, அந்த இடத்தை மெயின்டன் செய்பவர்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுவதாகவும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைகளை அகற்ற எந்தவித அறிவிப்பும் வழங்கப்படாத நிலையில் அவர்கள் அதனை செய்ததாகவும் தகவல்கள் வரும் நிலையில் அது குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் விசாரிக்கும்படி அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். 

மேலும், சிவகாமியின் சம்பவத்திலும் எஸ்சி, எஸ்டி சட்டத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தி இருப்பதாகவும் அவ்வாறு செய்தால் உடனடியாக நிவாரணத் தொகை 6 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். 

ஒப்பந்த தூய்மை பணியாளர்களில் வயது வரம்பு 50 வயது என நிர்ணயிக்கும் பொழுது 50 வயதிற்கு மேல் தான் அவர்களுக்கு பணமே தேவைப்படும் எனவும் அந்த சமயத்தில் வேலையை விட்டு போக சொன்னால் அவர்கள் எங்கே செல்வார்கள் என தெரிவித்த அவர் வேலையை விட்டு செல்லும் பொழுது அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து வேலையை விட்டு எடுக்கும்படி கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். 

மேலும் தூய்மை பணியாளர்களில் வாரிசு வேலை குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழக அரசு தற்போது ஒரு ஆணை பிறப்பித்துள்ளதாகவும் அதில், தூய்மை பணியாளர்கள் வேலையை விட்டு நீங்கினாலோ அல்லது இறந்து விட்டாலோ அந்த இடத்தை நிரப்புவதற்கு தனியாரிடம் ஒப்படைத்துள்ளதாக இருப்பதாகவும் அதனை தாங்களே எதிர்த்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த பணிகளை 99% SC மக்கள் தான் செய்வதாகவும், இந்த ஆணையால் ஒரு SC மக்களின் வேலையை பறிப்பதாக அர்த்தமாகி விடுவதாகவும் தெரிவித்தார். 

அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களின் பணிநேரம் குறித்தான கேள்விக்கு, ஏழு மணியிலிருந்து இரண்டு மணி வரை தான் அக்ரிமெண்ட்டிலேயே இருப்பதாகவும் ஆனால் நான்கு மணி வரை வேலை செய்வதாக தகவல்கள் வருவதாகவும் அவ்வாறு செய்ய விடக்கூடாது என மருத்துவமனை முதல்வர்களிடம் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். 

மேலும், தூய்மை பணியாளர்கள் அனைவரும் கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துதான் வேலை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் அந்த பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் வேலை செய்தார்கள் என்று தகவல்கள் வந்தால் அந்த தூய்மை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

அதேசமயம் அவர்களுக்கு வழங்கப்படும் கையுறைகளை முழு நேரமும் அணிந்து கொண்டு பணி செய்ய முடியாது எனவும் அதற்கு மாற்றாக ஏதேனும் வேறு துணைகளில் அது போன்ற பாதுகாப்பு உபகரணங்களை தயார் செய்வது குறித்து பேசி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பணியாளர்களை கணக்கு காண்பிக்கும் பொழுது அதிகமாக கணக்கை காண்பிக்கப்படுவதாகவும் ஆனால் களத்தில் குறைவான ஆட்களே இருப்பதாக ஆதாரத்துடன் புகார்கள் இருந்தால் நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தார். 

2021- 2022 வரைக்கும்  நான் பொறுப்பில் இருந்தவரை தமிழகத்திலிருந்து ஒரு புகார் கூட வரவில்லை எனவும் தற்பொழுது மார்ட் ல் இருந்து பொறுப்பேற்று எட்டு மாதங்கள் ஆகியும் நானாகத்தான் செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டு அந்தந்த இடங்களுக்கு செல்வதாகவும் கோவை மாநகராட்சியில் ஐந்து நாட்களாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து யாருமே தன்னிடம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்த அவர் தமிழ்நாட்டில் இது குறித்தான விழிப்புணர்வே இல்லை என தெரிவித்தார்.

செய்தி: பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment