/tamil-ie/media/media_files/uploads/2022/08/IMG-20220804-WA0193.jpg)
திருச்சி காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் காரணமாக கரையோர மற்றும் தாழ்வான தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பு செய்யவும் , பொதுமக்களை வெள்ளப் பகுதியிலிருந்து உடனடியாக பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்து தங்க வைப்பதற்கும் ஒரு காவல் ஆய்வாளர் , 4 காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 80 காவலர்கள் கொண்ட திருச்சி மாநகர காவல் பேரிடர் மேலாண்மை குழுவினர்களை தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன்
/tamil-ie/media/media_files/uploads/2022/08/IMG-20220804-WA0205.jpg)
ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை பகுதியில் தயாராக இருக்க வேண்டும் என்றும் , நீச்சல் தெரிந்த காவல் ஆளிநர்களுக்கு பாதுகாப்பு பணிக்கு நியமித்தும் , பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மிகவும் கவனமுடன் மீட்பு பணியில் ஈடுபடுமாறும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார் .
/tamil-ie/media/media_files/uploads/2022/08/IMG-20220804-WA0208.jpg)
இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து 44 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரப்பெற்று, திருச்சி கலையரங்கம் வளாகத்தில் உள்ள கலைஞர் திருமண அரங்கில் தயார் நிலையில் உள்ளனர்.
#Inpics || திருச்சிக்கு பேரிடர் மீட்பு குழுவினர் வருகை: களத்தில் காவல் ஆணையர் கார்த்திகேயன்- ஆட்சியர் பிரதீப் குமார்! https://t.co/gkgoZMIuaK | #Trichy | #rain | #FloodWarning | #NDRFpic.twitter.com/GeEv7srg0g
— Indian Express Tamil (@IeTamil) August 5, 2022
இவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் சந்தித்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.