திண்டுக்கல் மணல் குவாரி தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் இரண்டாவது முறையாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில் 2வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். இதனைத் தொடர்ந்து பல கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் கூறி சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து விசாரிப்பதற்காக இன்று மீண்டும் இரண்டாவது முறையாக தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் சோதனையை துவக்கினர். இந்த சோதனையின்போது இந்த சோதனையின்போது வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை நண்பகல் வரை நடைபெற்றது. தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றனர்.
சோதனையின் போது தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது 2 மகன்களும் வீட்டில் இல்லாத நிலையில் ரத்தினத்தின் மனைவி செல்வி மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை குறித்த விளக்கங்களை கூறியதோடு முக்கிய சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“