தேசிய கல்விக் கொள்கையில் இதெல்லாம் ஆபத்து: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

இந்­திய அள­வில் கல்­வித்­து­றை­யில் தமி­ழ­கம் 15 ஆண்­டு­கள் முன்­னோக்­கிப் பயணித்­துக் கொண்­டி­ருaப்­ப­தாக உயர் நீதி­மன்­றத்­தில் தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்­திய அள­வில் கல்­வித்­து­றை­யில் தமி­ழ­கம் 15 ஆண்­டு­கள் முன்­னோக்­கிப் பயணித்­துக் கொண்­டி­ருப்­ப­தாக உயர் நீதி­மன்­றத்­தில் தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

எனவே தமி­ழ­கத்­துக்கு புதிய தேசிய கல்­விக் கொள்கை அவசியம் இல்லை என்­றும் அரசு தாக்­கல் செய்­துள்ள மனு­வில் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் தேசிய கல்­விக் கொள்­கையை அமல்­ப­டுத்­தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நேற்று நீதிபதிகள் முனிஷ்வர் நாத் பண்டாரி மற்றும் மாலா அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

 அப்பொது தமிழக அரசு சார்பில் முன்வகைப்பட்ட வாதங்களில், ‘தமிழ்நாடு கல்வித் தகுதியில் 15 ஆண்டுகள் முன்னோக்கி உள்ளது.2020  தேசிய கல்வி கொள்கையில் 3 வயது இருக்கும் குழந்தை பள்ளி படிப்ப தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அப்படி 3 வயதில் பள்ளி படிப்பை தொடங்கவில்லை  என்றால் பின்னர் பள்ளிப் படிப்பை  படிக்க முடியாத சுழல் நிலவும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் கிராமபுற மாணவர்கள் பெரிதாக பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் 5 முதல் 6 வயதில்தான் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடங்குகிறார்கள்.

மேலும் இந்த கல்விக்கொள்கையில் 10வது வகுப்பில் மாணவர்கள் கல்வியை நிறுத்திவிட்டு. பின்னர் 11வது வகுப்பை எப்போது வேண்டுமானாலும் தொடரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் இடைநிற்றல் சதவிகிதம்  அதிகமாகும்.

 தமிழக கல்வி முறையில் 14 வயது வரை மாணவர்கள் பொது தேர்வை சந்திக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் தேசிய கல்விக்கொள்கையில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பொதுதேர்வை எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் தோல்வியடையும் குழந்தைகள் கல்வியை பாதியிலேயே விட்டுவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் மனநல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

“தமி­ழ­கத்­தில் நடை­மு­றை­யில் உள்ள 69% இட­ஒ­துக்­கீடு, பெண்­க­ளுக்­கான 33% இட­ஒ­துக்­கீடு, அரசு வேலை­யில் தமி­ழில் படித்­த­வர்­க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு என அனைத்து தரப்­பி­ன­ரை­யும் ஒருங்­கி­ணைத்து சமத்­து­வ­மான கல்வி என்ற அடித்­த­ளத்தை கொண்டுள்ள மதச்­சார்­பற்ற தமி­ழகத்­தில், இரு மொழிக்­கொள்­கை­யும் தாய்­மொழி­யில் அடிப்­ப­டைக் கல்­வி­யும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது,” என்று தமி­ழக அர­சின் பதில் மனு­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தமிழகத்­தில் தர­மான இல­வ­சக்­கல்வி, மதிய உணவு, இல­வச புத்­த­கம், சீருடை, மிதி­வண்டி, காலணி, மடிக்­க­ணினி, கல்வி உத­வித்­தொகை வழங்­கு­வ­தால் மொத்த மாண­வர் சேர்க்கை விகி­தம் தற்­போது 51.4 % உள்­ள­தென  தமிழ்நாடு அரசு சுட்­டிக்­காட்டி உள்­ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: National education policy cannot be implemented in tamilnadu say tn govt