Advertisment

ஐஇ தமிழ் நேரலையில் விக்டோரியா கவுரி: வாசகர்கள் கேள்விக்கு பதில்

கொரோனா நோய் தொற்று காலத்தில், மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கும் பாஜக மகளிர் அணியிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
National General Secretary BJP Mahila Morcha Advocate L Victoria Gowri IE Tamil FB Live

National General Secretary BJP Mahila Morcha Advocate L Victoria Gowri IE Tamil FB Live

National General Secretary BJP Mahila Morcha Advocate L Victoria Gowri IE Tamil FB Live : ஆண்களுக்கு நிகராக பெண்களால் அரசியலில் களம் காண முடியும் என்பதற்கான போராட்டம் வெகுநாட்களுக்கான போராட்டம். இன்றைய சூழலில் ஒரு அரசியல்வாதியாக உருவாகும் பெண்கள் குறித்து நாம் அறிந்து கொள்ள முற்படுவது மிகவும் குறைவு தான்.

Advertisment

ஐ.இ. தமிழ் ஒவ்வொரு நாளும், அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், காவல்துறையினர், இயக்குநர்கள் என்று ஒவ்வொரும் தங்களின் துறைசார் அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள பாலமாக அமைந்திருக்கிறது.

இன்று நம்முடன் உரையாட இருப்பவர் பாஜக தேசிய மகளிர் அணி பொதுச் செயலாளர், எல். விக்டோரியா கௌரி. வழக்கறிஞராக பணியாற்றும் இவர் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்டவர். உயர் நீதிமன்றக் கிளை மதுரையில் இவர் பணியாற்றி வருகிறார்.

மேலும் படிக்க : சென்னையில் 60 வார்டுகளில் தலா 10-க்கும் குறைவான கொரோனா நோயாளிகள்: ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

கொரோனா காலத்தில் பாஜக எவ்வாறு திறம்பட செயல்பட்டு மக்கள் மத்தியில் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கிறது, இடம் மாற்ற தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல மத்திய அரசின் சிறப்பு ரயில்கள் எவ்வளவு உதவி கரமாக இருக்கிறது? லாக்டவுனுக்கு பிறகு, இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டிற்கு பாஜக வைத்திருக்கும் திட்டங்கள் என்ன என்பது குறித்தும் நீங்கள் அவரிடம் ஆலோசிக்கலாம். உங்களின் கருத்துகளையும் கேள்விகளையும் அவர் முன் நீங்கள் வைக்கலாம்.

இவருடன் உங்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று மட்டும் தான்.  இன்று மாலை சரியாக ஆறு மணியளவில் எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க : உலகளவில் 3 லட்சம் பேரை பலி வாங்கிய கொரோனா

கொரோனா நோய் தொற்று காலத்தில், மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கும் பாஜக மகளிர் அணியிலும் இவர் இடம் பெற்றுள்ளார். கேரளா மற்றும் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் பாஜக எவ்வாறு நிவாரண உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது என்பது குறித்த தன்னுடைய அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொள்ள உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Ie Tamil Facebook Live
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment