/tamil-ie/media/media_files/uploads/2023/03/national-green-tribunal-1200.jpg)
தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
மதுரவாயலில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கட்டப்பட்ட அங்கீகரிக்கப்படாத ரசாயனப் பிரிவுக்கு எதிரான வழக்கு தொடுக்கப்பட்டது. அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டலம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த FOMRA ஹவுசிங் நிறுவனம், அகரமில் ஒரு வீட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. 500 மீட்டருக்கும் குறைவான தொலைவில், பல்வேறு அமிலங்கள் மற்றும் அபாயகரமான பொருட்களைக் கையாளும் இரசாயன தொழிற்சாலை உள்ளது.
இந்த பிரிவு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெறவில்லை என ரியல் எஸ்டேட் உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.
எனவே, அந்த பிரிவை ஆய்வு செய்யுமாறு வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் எஸ்.இந்திகாந்தி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இடத்தைப் பார்வையிட்டு, அந்த யூனிட்டில் 7,000 கிலோ ஹைட்ரோகுளோரிக் அமிலம், நீர்த்த சல்பூரிக் அமிலம் உள்ளிட்ட பல்வேறு இரசாயனங்கள் பேட்டரி பயன்பாட்டிற்காக விற்கப்படுவதை உறுதி செய்தார்.
இந்த பிரிவுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் இல்லாததால், பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார்.
இரசாயனப் பிரிவு அவர்களிடமிருந்து வர்த்தக உரிமத்தைப் பெறவில்லை என்பதை குடிமை அமைப்பும் உறுதிப்படுத்தியது.
எனவே, இந்த யூனிட்டை ஏன் மூடக்கூடாது என மாநகராட்சி கடந்த ஆண்டு காரணம் தெரிவிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.
இந்தப் பின்னணியில், இந்த வழக்கை கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தீர்ப்பாயம், தற்போது அபாயகரமான இரசாயனப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் இறக்குமதி விதிகள், 1989-ன் படி விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாசு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த இரசாயன பிரிவைச் சுற்றி பல வீட்டுவசதி சங்கங்கள் வந்துள்ளன. மேலும் குடியிருப்பாளர்கள் உடனடியாக யூனிட்டை மூடுமாறு பெருநகர சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.