கரூர் மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நவம்பர் 15-ம் தேதி கரூர் மாவட்டம் காந்தி நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். அதன்பிறகு, ஊடகங்களில் இதைப்பற்றி வெளியான செய்திகளை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் கரூர் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் பதிலளிக்க ஆறு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என தேசிய மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் உறவினர்களுக்கு இழப்பீது வழங்குவதோடு மட்டுமல்லாமல், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை ஒப்படைத்த அதிகாரிகளின் பொறுப்பு நிர்ணயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்பின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலாளரிடம் தேசிய மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
சாக்கடை அல்லது கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக மாநில அரசு தொடங்கியுள்ள விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்தும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் கூறியது.
துப்புரவு தொழிலின் போது பணியாளர்கள் பாதுகாப்பு கியர் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த முடியாமல், உயிரிழப்பை ஏற்படுத்திய அலட்சியத்தினால், அச்செயலில் ஈடுபட்ட அரசு ஊழியர் குறித்து அறிக்கையை நகராட்சி ஆணையர் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையம் கூறியது.
துப்புரவு அல்லது அபாயகரமான துப்புரவுப் பணிகள் ஏதேனும் நடந்தால், உள்ளாட்சி மற்றும் ஒப்பந்ததாரர் அல்லது முதலாளிகள் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil