கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தேசிய அளவிலான நான்கு சக்கர வாகனங்களுக்கு 'ப்ளூ பேண்ட் தேசிய ரேலி சாம்பியன்ஷிப் 2024' போட்டிகள் நடைபெற்றது.
இந்த சாம்பியன்ஷிப் சுற்றின் முதல் சுற்று சென்னையிலும், இரண்டாம் சுற்று நாசிக்கிலும் நடைபெற்ற நிலையில் மூன்றாம் சுற்று கோவையில் நடைபெறுகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று (ஜூலை 27) கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
/indian-express-tamil/media/media_files/H1rSpxM7yvSI0bVC3OpF.jpeg)
தொடர்ந்து எல் அண்ட் டி தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள மணல் தடம் கொண்ட பாதையில் 8 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட வீரர்கள் , வீராங்கனைகள் கார்களுடன் பங்கேற்று இருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/hGLW9cemzsz9YScqQoLM.jpeg)
இந்த போட்டியில் கலந்து கொண்ட கார்கள் அனைத்தும் அசத்தலான வண்ணங்களில் ரேஸ் கார்களுக்கு உண்டான மிடுக்குடன் காட்சியளித்தது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“