எலக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ELCINA) என்ற தொழில் அமைப்பானது எலக்ட்ரானிக் மற்றும் தொழில்நுட்ப உற்பத்தியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்த செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசுடன் இணைந்து 12வது 'சோர்ஸ் இந்தியா உச்சி மாநாட்டை', வருகின்ற பிப்ரவரி 13-14 ஆகிய தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.
'Source India' என்பது மின்னணுவியல் துறையால் உருவாக்கப்பட்ட தளமாகும். இதைப்பற்றி நடைபெறும் இரண்டு நாள் நிகழ்வில் மின்னணுத் துறை மற்றும் முக்கிய பங்குதாரர்களின் சவால்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எலக்ட்ரானிக் ஹார்டுவேர் உற்பத்தித் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த முயற்சிகள் 2025 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் துறையின் உற்பத்தியை 100 பில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கை கொண்டுள்ளது. இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 25% பங்களிப்பைஅதிகப்படுத்தும் இலக்கை கொண்டுள்ளது.
"2025 ஆம் ஆண்டுக்குள், குறைந்தபட்சம் இரண்டு பெரிய FAB முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பேன்" என்று 'ELCINA & MD, Globe Capacitors' இன் தலைவர் சஞ்சய் அகர்வால், மாநாட்டில் கூறியுள்ளார்.