/indian-express-tamil/media/media_files/rMpJEQvSW02XboICCPG4.jpg)
நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டி.ஜி.பி-க்கு தேசிய மகளீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் பலராலும் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், இவர் பேசியது தொடர்பாக நடிகை த்ரிஷா, கண்டனம் தெரிவித்தார். அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை அவர் பகிர்ந்தார். ´நடிகர் மன்சூர் அலிகான் என்னை பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான வகையில் பேசும் வீடியோ குறித்து அறிந்ததும், நான் வருத்தமடைந்தேன். அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன். இவரை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பேரை கொண்டு வருகின்றனர்” என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய தமிழக டி.ஜி.பி-க்கு தேசிய மகளீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஐ.பி.சி சட்டப்பிரிவு 509பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்கள் பயன்படுத்தி மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டும் இதுபோன்ற கருத்துகள் கண்டிக்கப்பட வேண்டும் எனவும் தேசிய மகளீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us