வீட்டில் குழந்தை பெற்றால் குற்றமா? வாடகை வீட்டை விட்டு வெளியேறிய தம்பதியினர் !

இவர்கள் மீது முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று டி.ஆர்.ஓ சுகாதாரத்துறை இணை இயக்குநர் புகார் அளித்துள்ளனர்.

இவர்கள் மீது முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று டி.ஆர்.ஓ சுகாதாரத்துறை இணை இயக்குநர் புகார் அளித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
natural home birth Perambalur couples ran away from rented house

natural home birth Perambalur couples ran away from rented house

natural home birth Perambalur couples ran away from rented house : பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தை சேர்ந்தவர் நியூகாலனியில் வசிக்கும் சதீஸ்குமார். இவருக்கு வயது 38. இவருடைய மனைவி பேபி (35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பேபிக்கு, இயற்கை முறையில், வீட்டிலேயே கடந்த 17ம் தேதி குழந்தை பிறந்துள்ளது.

Advertisment

மேலும் படிக்க : இந்தியாவிலேயே இங்கு தான் கொரோனா இல்லை! ஆனால் ட்ரெய்ன் பிடிச்செல்லாம் போக முடியாது!

இரண்டு நாட்களுக்கு முன்பு இதனை அறிந்த சுகாதாரத்துறையினர் பேபி மற்றும் அவரின் குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறீனார்கள். அவர் முடியாது என்று மறுக்கவும் விவாதம் நீண்டது. 4 மணி நேரமாக சுகாதாரத் துறையினர் விவாதம் செய்தும் பேபி அவர்களின் பேச்சினை கேட்கவில்லை.

மேலும் படிக்க : ஈகைப் பெருநாளில் 200 ஏழைகளுக்கு பிரியாணி பரிமாறிய சென்னை காஜா பாய் கடை!

Advertisment
Advertisements

இந்நிலையில் நேற்று மதியம் தங்களின் வாடகை வீட்டில் இருந்து வெளியேறிய அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். பின்னர் அவர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்றில், இயற்கை முறையில் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்வது குற்றமா என்று கேள்வி எழுப்பியிருக்கும் பேபியும், சதீஸ்குமாரும் அழுது புலம்பியுள்ளனர். இவர்கள் மீது முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று டி.ஆர்.ஓ சுகாதாரத்துறை இணை இயக்குநர் புகார் அளித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Perambalur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: