/indian-express-tamil/media/media_files/6kY6cR9IJfUAqDUplOU0.jpg)
ரஜினி வீட்டில் நடந்த நவராத்திரி விழா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் அவருடைய மனைவி ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான நவராத்திரி விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், விஜய் அம்மா ஷோபா, முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று சிறப்பிதனர்.
அம்பிகையை வழிபடும் நவராத்திரி விழா இந்த ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கொண்டாடப்பட்டது. இந்த 9 நாட்களும் வி.ஐ.பி.கள் வீடுகளில் கொலு வைத்து நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
Happy to Participate in the Navarathri Pooja Hosted by Smt.Latha Rajinikanth in her house at Shri.@rajinikanth poes garden, Chennai.Appreciate the Traditional way of celebrating #Navarathri Pooja.Happy to meet Other women Dignitaries During the Cultural Occasion.#DurgaPooja… pic.twitter.com/5qVTp5TVhv
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) October 24, 2023
அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி விழாவை அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்தார். லதா ரஜினிகாந்த் அவர்கள் வீட்டில் ஏற்பாடு செய்த நவராத்திரி விழாவுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, விஜய் அம்மா ஷோபா, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் என வி.ஐ.பி.களுக்கும் திரை பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, ரஜினிகாந்த் வீட்டில் பிரம்மாண்ட நவராத்திரி நிறைவு விழா அக்டோபர் 24-ம் தேதி இரவு நடைபெற்றது. ரஜினி வீட்டில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நவராத்திரி விழாவுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, விஜய் அம்மா ஷோபா, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நடிகை மீனா ஆகியோர் வந்து விழாவில் கலட்ருந்தனர். நவராத்திரி விழாவுக்கு வந்த வி.ஐ.பி-களையும் சினிமா பிரபலங்களையும் லதா ரஜினிகாந்த் வரவேற்றார்.
ரஜினி வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த நவராத்திரி விழாவில் வி.ஐ.பி.களும் பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தது கவனத்தைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.