Advertisment

மத்திய அரசின் நேர்காணல் தேர்வை எதிர்கொள்வது எப்படி? என்.சி.சி அதிகாரி விளக்கம்

தமிழ்நாடு என்.சி.சி இயக்குனரகம் தேசிய அளவில் மதிக்கப்படுகிறது. கோயம்புத்தூர் குழுமத்தில் உள்ள கேடர்கள் தேசிய மற்றும் இயக்குனரக அளவில் படிப்பில் சிறந்து விளங்குகிறார்கள். 

author-image
WebDesk
New Update
NCC official explained about central government interview

ஆயுதப்படையில் சேர மக்களை ஊக்குவிப்பது என்.சி.சி-யின் நோக்கங்களில் ஒன்றாகும்.

coimbatore | மத்திய அரசின் சேவை தேர்வு வாரிய நேர்க்காணலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்த பயிலரங்கு கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் என்.சி.சி இயக்குநரகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் கொமடோர் அதுல் குமார் ரஸ்தோகி கலந்துகொண்டார்.

அப்போது அவர், “இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியில் சேர எஸ்.எஸ்.பி எனப்படும் சேவை தேர்வு வாரிய நேர்க்காணலை எதிர்கொள்வது அவசியம்” என்றார்.

தொடர்ந்து, தமிழ்நாடு என்.சி.சி இயக்குனரகம் தேசிய அளவில் மதிக்கப்படுகிறது. 

தமிழ்நாடு என்.சி.சி இயக்குனரகம் தேசிய அளவில் மதிக்கப்படுகிறது. கோயம்புத்தூர் குழுமத்தில் உள்ள கேடர்கள் தேசிய மற்றும் இயக்குனரக அளவில் படிப்பில் சிறந்து விளங்குகிறார்கள். 

அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும். ஆயுதப்படையில் சேர மக்களை ஊக்குவிப்பது என்.சி.சி-யின் நோக்கங்களில் ஒன்றாகும்.

அந்த முயற்சிகள் வெற்றியடைய, செயல்முறைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது முக்கியம்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளி, கல்லூரிகளில் என்.சி.சி கேடர்களாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment