குழந்தைகளுக்கு இரு குரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், இது தொடர்பான அறிக்கையை திங்கள்கிழமை ஆளுநர் ரவியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இரண்டு மாணவிகளிடம் இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக ஆளுநர் ஆர் என் ரவி குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அவ்வாறு இரு விரல் பரிசோதனை நடத்தப்படவில்லை என தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை ஆளுநர் ஆர்என் ரவி மீண்டும் எழுப்பவே, இது தொடர்பாக குழந்தைகள் நல ஆணையம் விசாரணையை தொடங்கியது. அப்போது குழந்தைகளிடம் இரு விரல் பரிசோதனை நடைபெறவில்லை என குழந்தைகள் நல ஆணையம் கூறியதாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையில் இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மாணவிகளிடம் இருவிரல் பரிசோதனை நடைபெற்றுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கையை குழந்தைகள் நல ஆணையம் ஆளுநர் ரவியிடம் கொடுக்கிறது. இதைத்தொடர்ந்து இது தொடர்பான விசாரணை விரிவு படுத்தப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil