பீகாரில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்தை என்.டி.ஏ திங்கள்கிழமை அறிவித்துள்ளது; அதன்படி, பா.ஜ.க 17 மக்களவைத் தொகுதிகளிலும், ஜே.டி(யூ) 16 இடங்களிலும், எல்.ஜே.பி 5 இடங்களிலும் போட்டியிடுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) பீகாரில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. பீகாரில் உள்ள மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க 17 இடங்களிலும், ஜே.டி(யூ) 16 இடங்களிலும் போட்டியிடுகின்றன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 5 இடங்களில் போட்டியிட உள்ளது.
மேலும், 2 என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்.ஏ.எம்) மற்றும் உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய இரு கட்சிகளும் தலா ஒரு தொகுதியில் போட்டியிடும் என்று பீகாரில் பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளர் வினோத் தாவ்டே பீகார் பா.ஜ.க தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, குஜராத், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 6 மாநில உள்துறை செயலாளர்களை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“