சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்லம் அருகே உள்ள சதுமுகை பகுதியை சேர்ந்தவர்கள், முருகானந்தம், பூவரசன், ராகவன் மற்றும் இளையராஜா, கீர்த்தி வேல் துரை. இவர்கள் 5 பேரும் நண்பர்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இவர்கள் 5 பேரும் சத்தியமங்கலம் வந்துள்ளனர். அப்போது சத்தியமங்கலம் அடுத்துள்ள ஷென்பகபுதூர் என்ற இடத்தில், இவர்கள் சென்ற கார் கட்டுபாட்டை இழந்து புளிய மரத்தின் மீது மோதி உள்ளது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பூவரசன், கீர்த்திவேல் துரை, ராகவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முருகானந்தம், இளையராஜாவை மீட்டு அப்பகுதி மக்கள் கோபிசெட்டிபாளையம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, முருகானந்தம் உயிரிழந்தார். இதில் கீர்த்திவேல் துரை கோவில் பூசாரியாக உள்ளார். அவருக்கு அடுத்த வாரத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இவர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“