நீட் விவகாரத்தில தமிழக அரசின் கோரிக்கையை ஆரம்பத்தில் நிராகரிக்காமல், கடைசி நேரத்தில் நிராகரித்த மத்திய அரசின் செயல் ஏற்கதக்கதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உடுமலைபேட்டையை சேர்ந்த மாணவி கிருத்திகா +2 பொதுத்தேஇரவில் 1184 மதிப்பெண்ணும், கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 எடுத்துள்ளதாகவும், எனவே தன்னை மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட்க்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நேற்று விசாரித்த நீதிபதி கிருபாகரன், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு அநீதி இழைத்து விட்டதாக கருத்து தெரிவித்தார்.
இதனை அடுத்து இந்த வழக்கில் இன்று நீதிபதி கிருபாகரன் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை மறுப்பதற்கில்லை என்றார். ஆனால் மாநில பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வில் தகுதி பொற்னவர்களில் 9.3% பேருக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்துள்ளதற்கு காரணம் கடந்த 10 ஆண்டுகளாக பாடதிட்டத்தை மேம்படுத்தாமல் தமிழக அரசு செய்த தவறே மாணவர்களின் இந்த நிலைக்கு காரணம் என தெரிவித்தார். அதேபோல தகுதியான ஆசிரியர்கள் இல்லாததும் மாணவர்களின் இந்த நிலைக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் நீட் விலக்கு கோரிய விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை ஆரம்பத்திலேயே நிராகரிக்காமல், கடைசி நேரத்தில் நிராகரித்த மத்திய அரசின் செயல் ஏற்கதக்கதல்ல என கண்டனம் தெரிவித்தார்.
மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு போதுமானது என்ற நிலையால் இனிவரும் காலங்களில் 12 வகுப்பு பாடத்தை படிப்பதற்கு பதிலாக நீட் தேர்வுக்கு முழுமை தங்களை தயார்படுத்திக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என கருத்து தெரிவித்தார்.
நீட் தேர்வு குறித்த மாணவர்களின் சந்தேகங்களை உடனடியாக போக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளை தொகுத்து மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதனையடுத்து நீதிபதி, நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுளளது. எனவே இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக்கூறி மாணவி கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.