2019-ல் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னையை சேர்ந்த தருண் மோகன் தொடர்ந்த வழக்கில், விசாரணையை சிபிசிஐடி போலீசார் முறையாக கையாளவில்லை என்றும் விசாரணை அதிகாரியை மாற்றுங்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
2019-ம் நடைபெற்ற நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் பலர் சேந்திருக்கிறார்கள் என தேனி அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த சென்னை மாணவர் உதிப் சூர்யா என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்தனர். அப்போது, 2019-ம் ஆண்டு தேர்வில் உத்தரப் பிரதேசம், டெல்லி, கல்கத்தா, ராஜஸ்தான் போன்ற இடங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுந்திய சம்பவங்கள் நடைபெற்றது.
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதப்பட்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று (ஜூலை 16) உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியிடம் செய்தி ஊடகங்கள், பத்திரிக்கைகள் கண்டபடி செய்திகளை வெளியிடுகின்றன என உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அதற்கான ஆதாரங்களைக் காட்டினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, செய்தி ஊடகங்கள் சரியாகத்தான் செய்திகளை வெளியிடுகின்றன என்று கூறினார். மாணவர்களின் அனைத்து அணிகலன்களையும் கழற்றி சோதனை செய்யும் நீங்கள், போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்வி கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கில், முந்தைய விசாரணையின்போது, தேசியத் தேர்வு முகமை தேவையான விவரங்களைத் தரவில்லை என்று சி.பி.சி.ஐ.டி தரப்பில் கூறப்பட்ட நிலையில், இன்று விசாரணையின்போது, சி.பி.சி.ஐ.டி போலீசார் கேட்ட ஓ.எம்.ஆர் சீட் விவரங்களை 2023-ம் ஆண்டு கொடுத்துள்ளோம் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், சி.பி.சி.ஐ.டி கேட்கும் வழக்கு குறித்த ஆவணங்களை, தேசிய தேர்வு முகமை, 19-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.
மேலும், 2019-ம் ஆண்டு நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் முறையாக கையாளவில்லை விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்றுங்கள் என நீதிபதி புகழேந்தி அறிவுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.