Neet Exam 2020: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜே.இ.இ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையும் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நீட், ஜே.இ.இ தேர்வுகள் நடத்தப்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவச் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்யவேண்டும்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா மரணம் – ஒரே நாளில் 118 பேர் உயிரிழப்பு
ஏற்கனவே, இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்து மாணவர்களின் 12-ம் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடமும் உங்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
தமிழ்நாடு தொடர்ச்சியாக நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. மேலும், அதனை ரத்து செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை செய்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த ஆண்டு, இந்திய அரசும், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் கடந்த சில மாதங்களாக கொரோனாவுடன் போரிட்டு வருகின்றனர்.
இறுதி செமஸ்டர் தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து: முதல்வர் பழனிசாமி உத்தரவு
நீட் தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தை உருவாக்கும். 2020-21-ம் ஆண்டுக்கான மருத்துவ கல்விச் சேர்க்கை 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிகளின் அடிப்படையில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் ஏற்கெனவே 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன என்று தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil