தமிழகத்தில் ‘நீட்’தேர்வு நடைபெறுவது உறுதி : அமைச்சர் செங்கோட்டையன்

‘நீட்’ தேர்வு தொடர்பான வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவதி உறுதி என்றும், தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. தமிழகத்தில் கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தவறாமல் தந்துள்ளது. நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது.வழங்குகள் முடிந்த பின்னர், தமிழக அரசு சார்பில் இது குறித்த முடிவு எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தமிழக மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள். ‘நீட்’ தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து பொதுத்தேர்வுக்கு பின்னர் 20 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்” என்றார். தமிழகத்தில் நீட் தேர்வை தடுக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்றார்.

மேலும், ‘நீட்’ தேர்வு தொடர்பான வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

×Close
×Close