scorecardresearch

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி: ரயில் முன் குதித்து தற்கொலை

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ரயில் முன்  குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் உத்திராபதி மற்றும் மகள் நிஷா நெய்வேலி அருகே வசித்து வந்தானர். இந்நிலையில்  நிஷா நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார்.  மேலும் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மீண்டும் பயிற்சி வகுப்புக்கு சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் பயிற்சி மையம் நடத்திய மாதிரி நீட் தேர்வில் அவர் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் மனமுடைந்த நிஷா, தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். வடலூர் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில், பெங்களூரிலிருந்து கடலூர் நோக்கி வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இநிந்லையில் இந்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Neet exam female student suicided on jumping before a train