Advertisment

நீட் தேர்வில் மீண்டும் ஒரு ஆள்மாறாட்டமா? கோவையில் இருவர் மீது புகார்

NEET Exam fraud allegation in Kovai: சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவையிலும் இருவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET Exam fraud allegation in Kovai, NEET exam fraud Udith Surya, Udith Surya arrested, NEET fraud, NEET fraud allegation, நீட் தேர்வு ஆள்மாறாட்டம், கோவை தனியார் மருத்துவக் கல்லூரி, உதித் சூர்யா, kovai private medical college, directorate of medical college, directorate of medical council, NEET exam, MBBS admission

சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நீட் தேர்வில் வேறு ஏதேனும் மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்துள்ளார்களா? தேர்வு எழுதிய மாணவரும் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவரும் ஒருவர்தானா என்பது உறுதி செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியது.

இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கிற ஒரு மாணவர், ஒரு மாணவி இருவரின் புகைப்படங்களில் மாற்றம் இருப்பதால் அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு அந்த தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மாணவர்களின் தேர்வு அனுமதிச்சீட்டு புகைப்படத்திற்கும் தற்போதைய அவர்களுடைய புகைப்படத்திற்கும் முரண்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர்கள் சான்றிதழில் பழைய புகைப்படத்தை ஒட்டியிருக்கலாம் என்பதால் மீண்டும் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புகைப்படத்தில் சற்று மாறுதல் இருப்பதால் ஆள்மாறாட்டம் என்ற முடிவுக்கு வர முடியாது என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மேலும், 24 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுவிட்டன. எந்த முறைகேடும் இல்லை. அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் சரியாக உள்ளன என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மாணவர்களின் பெற்றோர் அது தங்களுடைய மகன் மற்றும் மகளின் புகைப்படம்தான் என்று உறுதி செய்துள்ளதாக அந்த கல்லூரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கோவை தனியார் மருத்துவக் கல்லூரியின் டீன் ராமலிங்கம் ஊடகங்களுக்கு கூறுகையில், முதலாம் ஆண்டு மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் போது இருவரது புகைப்படங்களில் மாறுபாடு இருந்தது தெரியவந்தது. சம்பந்தபட்ட மாணவர்கள் 2 பேரும் தேர்வுக்குழு விசாரணைக்காக சென்னை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இது குறித்து எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் ஊடகங்களிடம் கூறுகையில், “கலந்தாய்வின் போது எந்த இடத்தில் தவறு நடந்தது என தெரியவில்லை. சந்தேகம் குறித்து உரிய ஆவணங்களை மாணவர்கள் அளித்தால்தான், அவர்கள் பெயர் பதிவு செய்யப்படும். இரு மாணவர்களின் புகைப்படங்கள் பொருந்தவில்லை என கோவை தனியார் கல்லூரியில் இருந்து அறிக்கை வந்துள்ளது .நீட் தேர்வு அட்மிட் கார்டில் உள்ள புகைப்படமும், கலந்தாய்வு புகைப்படமும் வெவ்வேறாக உள்ளது என கல்லூரி அறிக்கை அளித்துள்ளது.” என்று கூறினார்.

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment