2019ம் ஆண்டில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக தேசிய அளவிலான தகுதி நுழைவு தேர்வு (நீட்) மே 5ம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று ( ஜூன் 5) வெளியாகின.
தமிழ்நாட்டில் 48.57 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 9.01 சதவீதம் அதிகமாகும். முதல் 50 இடங்களில் தமிழக மாணவர்கள் இடம் பெறவில்லை.
இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போன வருத்தத்தில் திருப்பூரை சேர்ந்த மாணவி ஒருவர், இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் ராஜலட்சுமி தம்பதியின் மகள் ரிதுஸ்ரீ. இவர், 12-ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்துள்ள நிலையில், நீட் தேர்வில் தோல்வியுற்றதாக தெரிகிறது.
இதனால், விரக்தியடைந்த ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல். நீட் தேர்வில் தோல்வியடைந்தால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா (17) என்ற மாணவியும் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.